



தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக தீ தொண்டு நாள் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள MEPS தொழிற்பேட்டையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

MEPS தொழிற்பேட்டை பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தொழில் கூடங்கள் மற்றும் குடோன்களில் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் எந்தெந்த வழிமுறைகளில் தீயணைக்க உபகரணங்கள் தீயணைப்புத் துறையிடம் தயார் நிலையில் உள்ளது என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
அது மட்டுமின்றி தீ விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்படும் நபர்களை எப்படி மீட்பது என்பது குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் தத்துரூபமாக செய்து காட்டினர்.
மேலும் தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மீட்பு பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
விடுமுறை நாட்களில் மாணவர்கள் ஏரி குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு குளிக்கச் செல்லும் முன் முறையான நீச்சல் பயிற்சி பெற்று செல்ல வேண்டும் அதன் மூலம் அசம்பாவிதம் நிகழ்வதை தவிர்க்க முடியும் அவற்றை மீறி ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரிட்டால் உடனடியாக தீயணைப்பு துறையை தொடர்பு கொள்ளும்படி தமிழக தென் மண்டல தீயணைப்பு துறை அதிகாரி லோகநாதன் தெரிவித்தார்.

