மதுரை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, இன்று மதுரை உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுபட்டி பகுதியில் நடைபெற்று வரும் 58 கால்வாய் மறு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.,

மேலும் உத்தப்பநாயக்கணூரில் உசிலம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாத்தேவர் மணிமண்டப கட்டுமான பணி மற்றும் பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் என உசிலம்பட்டியின் வளர்ச்சி திட்ட பணிகளையும் ஆய்வு செய்து விரைவில் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.,

தொடர்ந்து உத்தப்பநாயக்கணூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நடுப்பட்டி அங்கன்வாடி மையம், உசிலம்பட்டி தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.,
மாவட்ட ஆட்சியரின் இந்த ஆய்வின் போது உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் மற்றும் பல்வேறு துறையின் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.,





