திண்டுக்கல் அருகே படமெடுத்த ஆடிய நல்ல பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர்.

செம்பட்டியில் நள்ளிரவில் வந்த 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்து தீயணைப்புத் துறையினர் வனத்தில் விட்டனர். திண்டுக்கல், செம்பட்டி, பாண்டியன் நகரை சேர்ந்த சார்லிஜோசப்(60) இவர் வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் கோழிகளின் சத்தம் கேட்டு பார்த்தபோது கோழிகளில் அருகே 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி பாம்பு பிடிக்கும் கருவி மூலம் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.




