• Sat. May 16th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

தொண்டர்கள் மத்தியில் அமைச்சர் சி டி ஆர் பேச்சு..,

ByKalamegam Viswanathan

May 16, 2026

யாரும் நினைத்து பார்க்காத ஒரு சூழ்ச்சி ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து முயற்சி செய்தார்கள் அதையும் தளபதி முறையடித்தார்.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ள அக்கட்சியின் இணைப்பு பொதுச்செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.அவருக்கு மதுரை விமான நிலையத்தில் தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் தொகுதிக்குள் நுழைந்தவுடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோயில் தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து தனக்கன்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சியினர் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பேசும் போது:

உங்களுடைய அரசியலில் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகுங்கள். தளபதியை முடக்க வேண்டும் என்று நினைத்தார்கள் நம்ம அதை முறையடித்தோம் கடைசி ஒரு வாரத்தில் அப்படி ஒரு சூழ்ச்சியை யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள் ஸ்டாலினும், எடப்பாடியும் சேர்ந்து பார்த்து இருக்கிறீர்களா அதிமுக, திமுக இரண்டும் சேர்ந்து முயற்சி செய்தார்கள். அதையும் தளபதி முறையடித்தார். காலையில் எழுந்தவுடன் தலைமை செயல் அலுவலகத்திற்கு வந்து விடுகிறார் முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள் அதிகாரிகள் வருகிறார்களோ இல்லையோ அவர் தன்னுடைய பணியை தொடங்குகிறார். தலைமைச் செயலகத்தில் எல்லோருக்குமே புதுசாக உள்ளது ஒவ்வொரு நிமிடத்தையும் அவர் வீணடிப்பதில்லை. எந்த தடையும் இல்லை ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது மாணவர்களுக்கு நீதி சென்றுவிட்டது. எந்த அரசாங்கமும் இந்த அளவிற்கு நடந்திருக்காது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் தேவையில்லாத மதுபான கடைகள் நாம் வாக்குறுதி கொடுத்தது போல் மாவட்ட ஆட்சியரிடம் பேசி அதை மூடுவோம். மக்களுக்கு தேவையில்லாத விஷயம் இருக்கக் கூடாது நம்ம என்ன நினைத்தமோ அதுதான் நடக்கும் பழைய எம்எல்ஏ மாறி கட்டிங் சிஸ்டமோ பர்சன்டேஜோ இருக்காது. மக்கள் நினைத்தது போல் 100% லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரு அரசாக இருக்கும் என்றார்.