• Thu. Jun 11th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் மின்கம்பங்களில் கட்டப்படும் விளம்பரப் பலகை..,

ByS.Ariyanayagam

May 15, 2026

திண்டுக்கல் மின்கம்பங்களில் கட்டப்படும் விளம்பரப் பலகையால் ஆபத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல் நகரில் மின்கம்பங்களில் அனுமதியின்றி கட்டப்படும் விளம்பர பலகைகள் குறித்து, அதிகாரிகளின் அலட்சியம் காட்டுகின்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மின்கம்பங்களில் அனுமதியின்றி மீண்டும் விளம்பர பலகைகள் முளைத்துள்ளன, அவற்றை அகற்றுவதில் நகரமைப்பு பிரிவினர் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இது போன்ற அனுமதியற்ற விளம்பர பலகைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆன்லைனில் அனுமதி பெறவும் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் அறிவுறுத்தியுள்ளார்.

மின்கம்பங்களில் விளம்பர பலகைகள் கட்டுவது பாதுகாப்பற்றது, முக்கியமாக மழை மற்றும் இடி மின்னல் காலங்களில் மின் கம்பங்கள் அருகில் நிற்பது அபாயகரமானது. திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் இது போன்ற சட்டவிரோத விளம்பர பலகைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.