• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

“உரம் போட்டு வளர்த்த தீ”.. வாரிசு பாடல் வரிகள் வைரல்

ByA.Tamilselvan

Dec 3, 2022

நடிகர் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை வெளிப்படுத்தும் வகையில் நாளை வெளியாகும் வாரிசு படத்தின் பாடல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தின் 2வது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் இளைய தளபதி நடித்துள்ள வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வரும் ஜனவரி 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இந்தப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தி நடித்துள்ளனர்.
இந்தநிலையில், இந்தபடத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் கடந்த 5-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.விஜய், எம்.எம். மானசி பாடியுள்ள ரஞ்சிதமே பாடல் யூட்யூப்ப்பில் 77 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.இதனிடையே, படத்தின் 2 வது பாடலான தீ தளபதி பாடல் வரும் 4-ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் சினிமாவில் நடிகர் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.வாரிசு படத்தின் 2 வது பாடல் இதனை நினைவுகூறும் விதமாக இருக்கும் என தெரிகிறது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.