• Wed. Sep 18th, 2024

ஐதராபாத்திலிருந்து தனது பைக் டூரை துவங்கும் அஜித்

ByA.Tamilselvan

Dec 2, 2022

நடிகர் அஜித் தனது பைக் டூரை துவங்குவதற்காக ஐதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார்.சென்னை விமானநிலையத்தில் புதிய தோற்றத்துடன் ரசிகர்களுடன் செல்பி எடுத்தகொண்ட படங்கள் வைரலாகி வருகின்றன.
நடிகர் அஜித், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சினிமா படப்பிடிப்புக்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து அவர் தனது பைக் டூரை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணம் முடிந்தபிறகு ஏகே62 படத்திற்கான படப்பிடிப்பை தொடங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எங்கும், எப்போதும் செல்பி புகைப்படம் எடுத்துக்கொள்ள மறுக்கும் நடிகர் அஜித், சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதற்குமுன்பு தாடி மீசையுடன் சுற்றி வந்த அஜித் தற்போது முகசவரம் செய்து தாடி மீசை இல்லாமல் புதிய கெட்டப்பில் வலம் வந்தது அவருடைய ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *