தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்த பிரபல நடிகரும், எழுத்தாளருமான ராமதாஸ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர்,பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து விருகின்றனர்.
மோகன் நடித்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் திரைப்படத்தின் மூலம் 1986ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஈ.ராமதாஸ். அதனைத் தொடர்ந்து ராமராஜன் நடித்த ராஜா ராஜா தான், சுயம்வரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், எழுத்தாளராகவும் உலா வந்தார். பல்வேறு படங்களின் கதை விவாதங்களில் பங்கு பெற்றுள்ளார்.
வசூல் ராஜா MBBS படத்தில் வார்டு பாயாக நடித்தவர் அதன்பிறகு யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, தர்மதுரை, அறம், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். விசாரணை திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக இவர் நடித்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. திரைப்பட விழாக்களில் இவர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், ஈ.ராமதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு உயிரிழந்தார். அவரின் உடல் கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஈ.ராமதாஸ் மகன் கலைச்செல்வன், “எனது தந்தை எழுத்தாளர், இயக்குநர், நடிகர் ஈ.ராமதாஸ் MGM மருத்துவமனையில் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். இறுதி சடங்குகள் இன்று மாலை 5 மணியளவில் முனுசாமி சாலை, கே. கே. நகர், அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.ஈ.ராமதாஸ் மறைவுக்கு திரைத்துறையினர், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- சிந்தனை கருத்தாளர் விருது பெற்ற மதுரை மாணவிக்கு பாராட்டு விழாமதுரை அருகே சோழவந்தான் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி சர்வதேச சிந்தனை கருத்தாளர் […]
- நீலகிரி – கூடலூரில் அரசு பதுமான கடை உடைத்து திருட்டுநீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து காலமூலா செல்லும் வழியில் இரண்டு அடுத்தடுத்து மதுபான கடைகள் உள்ளது […]
- தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிரிழப்பு….சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் அரசு மருத்துவமனையில் […]
- மதுரையில் ஒரே வாரத்தில் ஒரே பகுதியில் 2 கொலையால் பொதுமக்கள் அதிர்ச்சிமதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் தைபூசம் மற்றும் தைபௌர்ணமியை […]
- சிப்ஸ் பாக்கெட்டை இணைந்து திருடும் நாயும் குரங்கும் : வைரல் வீடியோ..!கடைக்கு வெளியே தொங்கவிடப்பட்டுள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளை நாயின் முதுகில் ஏறிக்கொண்டு குரங்கு திருடும் காட்சி இணையதளத்தில் […]
- குரைப்பவர்கள் கடிக்க மாட்டார்கள் பதான் படத்துக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ்திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலையாள ஊடகமான மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்து கொண்ட நடிகர்பிரகாஷ் ராஜ், பதான் […]
- அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு […]
- மீண்டது… நமது அரசியல் டுடே வார இதழ் 11.02.2023
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 110: பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை […]
- பொது அறிவு வினா விடைகள்
- சம்யுக்தாமேனனை
நெகிழ வைத்த மதுரைநாயகி சம்யுக்தா வாத்தி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டபோது, “ தயவுசெய்து சம்யுக்தா […] - கிராமி விருது விழாவில் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்த்த இந்தியப் பெண்..!அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில் இந்திய இசைக் கலைஞர் அனெட்பிலிப் காஞ்சிபுரம் பட்டுடுத்தி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வாழ்க்கைச் சக்கரத்தில் துன்பம் என்ற துரு பிடிக்கத்தான் செய்யும்.அது சக்கரத்தை உருளச் செய்யும் பொருட்டு […]
- குறள் 375நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு.பொருள் (மு.வ):செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் […]
- மாணவர்களுக்கு அறிவுரை சொன்ன நடிகை நயன்தாராநயன்தாரா ‘இறைவன்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாகவும் ‘ஜவான்’ இந்தி படத்தில் ஷாருக்கானுடனும் நடித்து வருகிறார். […]