தெலுங்குத் திரையுலகின் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, பிளாக் பஸ்டர் படமான ‘கூடச்சாரி’ திரைப்படம் தொடங்கி வணிக ரீதியாக வெற்றிகரமான பல படங்களைக் தயாரித்து வெளியிட்டு வருகிறது
‘விட்னெஸ்’ மற்றும் ‘சாலா’ போன்ற படங்களைத் தயாரித்து தமிழ்த் திரையுலகிலும் அடியெடுத்து வைத்தது. இப்போது அதன் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் படத்தில்நடிகர் சந்தானம் மற்றும் இயக்குநர் கார்த்திக் யோகி இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘வடக்குப்பட்டி ராமசாமி’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
மேலும் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் படத்தில் நடிக்க உள்ளனர்.
பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான வி.ஸ்ரீ.நட்ராஜ் படம் குறித்துப் பேசும்போது,
“பீப்பிள் மீடியா ஃபேக்டரியில் தொலைநோக்குப் பார்வையுள்ள தயாரிப்பாளர்களான டி.ஜி.விஸ்வபிரசாத் மற்றும் இணைத் தயாரிப்பாளர் விவேக் குச்சிபோட்லா ஆகியோர் தெலுங்கில் சிறந்த பொழுதுபோக்கு படங்களுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்வித்துள்ளனர்.நாங்கள் தமிழில் படங்கள் தயாரிக்க முடிவு செய்தபோது, இதே போன்று நல்ல கமர்ஷியல் எண்டர்டெயினர் படங்களைக் கொடுக்கவே நினைத்தோம்.
நடிகர் சந்தானம் எந்தவொரு ஜானர் கதைக்கும் பொருந்திப் போகக் கூடியவர். அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருந்தோம்.அப்போது தற்செயலாக நாங்கள் ‘டிக்கிலோனா’ படம் பார்த்துவிட்டு இயக்குநர் கார்த்திக் யோகியை சந்தித்தபோது அவர் ஒரு அற்புதமான கதையை எங்களுக்கு சொன்னார்.
‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற கேரக்டர் பன்முக நடிகரான கவுண்டமணி சாரின் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்று. இப்போதுள்ள தலைமுறை இளைஞர்களிடம் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இந்த கதாபாத்திரம் மீம் மெட்டிரியலாக உள்ளது. கார்த்திக் கதையை சொல்லி முடித்தபோது, அது படத்தின் சாராம்சம் மற்றும் கதாநாயகனின் குணாதிசயத்துடன் நன்றாக பொருந்திப் போயிருப்பதை உணர்ந்தோம். பல விஷயங்களில் ‘நம்பிக்கை Vs நம்பிக்கையற்றது’ என்பதைக் கொண்டு தமிழ்நாடு இருந்து வருகிறது.ராமசாமி என்ற பெயரே மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசும் ஒரு சின்னமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இயக்குநர் கவுண்டமணி சாரின் மிகப் பெரிய ரசிகர். மேலும் அவரது முந்தைய படமான ‘டிக்கிலோனா’ கூட கவுண்டமணி சாரின் பல நகைச்சுவை வரிகளால் ஈர்க்கப்பட்டு உருவானதுதான்.
இந்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஒரு பீரியட் காமெடி – ட்ராமா படமாக அமைந்து அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் பிடித்த ஒன்றாக அமையும் என உறுதியாக நம்புகிறோம்..” என்றார்.
- தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதபடி தேர்வு படிவம்.., அஞ்சல் துறை செயலாளருக்கு சு. வெங்கடேசன் எம். பி கடிதம்!ஒன்றிய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு […]
- இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!ஒன்பதாவது நாளான இன்று கிராமநிர்வாக அலுவலகம் முன்பு கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தால் பரபரப்பு! விருதுநகர் மாவட்டம் […]
- ராஜபாளையத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் விநியோகம்!விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 33 விவசாயிகளுக்கு தென்னையில் ஊடுபயிராக பயிரிடுவதற்கு ஏற்ற நாட்டு […]
- சிவகாசியில், தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு அரிவாள் வெட்டு…
2 மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகேயுள்ள வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் குருராஜ் (34). இவர் சிவகாசியில் உள்ள […] - தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு…விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் […]
- எம்.புதுப்பட்டி, ஸ்ரீகூடமுடைய அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி பகுதியில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள, பிரசித்திபெற்ற அருள்மிக […]
- சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்புமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூச்சிப்பாண்டி வயசு 55 இவருக்கு திருமணம் […]
- கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன்- மனைவி தீக்குளிக்க முயற்சிசென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தை அளவிடு செய்ய இரண்டு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்கும் வட்டாட்சியர் […]
- ஐஸ்கிரீமில் தவளை விவகாரம்- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுதிருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீமில் உயிரிழந்த தவளை இருந்த விவகாரம்; கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுக்காக மாதிரிகள் […]
- திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன […]
- தலைக்கூத்தல் – சினிமா விமர்சனம்‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் […]
- கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்புகாவல்துறையினரின்நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் அவரது மனைவி […]
- மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்எல் ஐ சி ,எஸ் பி ஐ நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்த அதானி […]
- மதுரை வழியாக செல்லும் ரெயில்களின் போக்குவரத்து மாற்றம்..!!மதுரை, விருதுநகரில் இரட்டை ரெயில்வே பாதை இணைப்பு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. […]
- சென்னை ஐகோர்ட்டுக்கு 5 புதிய நீதிபதிகள்- ஜனாதிபதி உத்தரவுசென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 17-ந் […]