


தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி விழா காட்சி அளித்தார்.
அதை தொடர்ந்து ஆலய மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சியும், பின்னர் திருதேரோட்டமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்திலிருந்து மேள தாளங்கள் முழங்க வெள்ளி ரிஷிப வாகனத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் அம்பிகையுடனும் மற்றொரு வெள்ளி ரிஷிப வாகனத்தில் அலங்காரவல்லி உள்ளிட்ட சுவாமிகள் முக்கிய வீதிகள் வழியாக அமராவதி ஆற்றங்கரை அருகே வந்தடைந்த பிறகு சிவாச்சாரியார்கள் சூலாயத்திற்கு பால், தயிர், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்ற தொடர்ச்சியாக பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு தூப தீபங்கள் கட்டப்பட்டது.
தொடர்ந்து ரிஷிவ வாகனத்தில் காட்சியளித்த கல்யாண பசுபதீஸ்வரர் அம்பிகை உள்ளிட்ட சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்று கூடி இருந்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்ட பின்னர் தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

