


கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி நச்சலூர் மேல நந்தவனக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜன். வயது 30 விவசாயக் கூலி தொழிலாளி. இவர் திருச்சி மாவட்டம் அதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமாயி வயது 25 என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சமூகத்துடன் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. தேவராஜன் ராமாயி இருவருக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. தனது மனைவியின் செயல்கள் குறித்து பிரசாந்திடம் போன் மூலம் நேற்று இரவு தகவல் தெரிவித்தார்.

தனது தங்கையின் கணவர் கூறியதன் பேரில் இன்று நச்சலூரில் உள்ள தன் தங்கை வீட்டிற்கு பிரசாந்த் வந்தார். தனது மாமாவை கடைக்கு சென்று வர கூறிவிட்டு தங்கை இராமாயிடம் தனியாக குடும்பத்த தகராறு குறித்து விசாரணை செய்தார்.
அப்போது முரண்பட்ட தகவல் கூறியதன் பெயரில் ஆவேசம் அடைந்த அண்ணன் பிரசாந்த் தங்கையை கையால் தாக்கி கழுத்தை நெருக்கி கொலை செய்தார். வீட்டில் யாரும் இல்லாததால் ராமாயி அண்ணன் பிரசாந்த் தனது ஊருக்கு சென்று விட்டார்.
பின்னர் வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்த இராமாயின் கணவர் தேவராஜன் வீட்டில் வந்து பார்த்தபோது காதில் ரத்தத்துடன் ராமாயி இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தேவராஜன் அருகில் உள்ள உறவினர் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.
தேவராஜன் நங்கவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் இறப்பில் சந்தேகம் குறித்து போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்தபோது மதியம் தங்கையை அடித்து கொலை செய்து விட்டதாக பிரசாந்த் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
தகவல் அறிந்த நங்கவரம் போலீசார் பிரசாந்தை கைது செய்து நங்கவரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நங்கவரம் போலீசார் உடல்கூறு ஆய்வுக்காக கரூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர்.

