• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jan 5, 2023

சிந்தனைத்துளிகள்
முயற்சி உடையவனின் வளர்ச்சியை தடுக்க முடியாது.
புதைத்தாலும் மரமாக முளைத்து எழுந்து நிற்பான்.

சிக்கல்கள் வாழ்க்கையில் அனைவருக்கும் இருப்பவை
அந்த சிக்கல்கள் உன்னை சிதைக்க வருபவை அல்ல.
அவை தான் உன்னை செதுக்குபவை..!

யாரும் உன்னை தூக்கி வீசினால்
அவர்கள் முன்னால் உயரமாக வளர்ந்து நில்லு…
அடுத்த தடவை அவர்கள் உன்னை பார்க்கும் போது
அன்னாந்து பார்க்கும் அளவிற்கு…!

நீ ஒரு செயலை செய்ய விருப்பினால்
செய்ய தொடங்கும் போது பேசுவதை நிறுத்தி விடு
அடுத்த தடவை நீ பேசும் போது
அந்த செயல் செய்து முடிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

உண்மையான உங்கள் வளர்ச்சியின் தொடக்கம்
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம்
கண்டு கொள்ளும் போதுதொடங்குகின்றது..!

உனக்கென்று படைக்க பட்ட எதுவும் உன்னை விட்டு
வேறு யாருக்கும் போகாது
நீ தான் அதை முயன்று போராடி வெல்ல வேண்டும்.
உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள்
அது பிழையாக இருந்தாலும் பரவாயில்லை
அடுத்த முறை சரியாக சிந்திக்க முடியும்..!