• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jan 4, 2023

சிந்தனைத்துளிகள்

இறைவனைத் தேடி ஓடாதீர்கள்
நீங்கள் தேடும் இடங்களில் அவன் இல்லை…

சுமைகளை மனதில் ஏற்றாதீர்கள்
அச்சுமைகளில் வாழ்வின் சுகம் இல்லை…

கரைகளை மீறி ஓடாதீர்கள்
கண் கெட்டு திரிவதில் பயன் இல்லை…

கறைகளை நெஞ்சில் வாங்காதீர்கள்
அது வாழும் வாழ்வுக்கு அழகு இல்லை…

வெற்றியைத் தேடி ஓடாதீர்கள்
அது தேடும் கரங்களில் வருவது இல்லை…

கற்பனைக் குதிரை ஓட்டாதீர்கள்
அது எந்தப் பயனும் தருவது இல்லை…

கடமையை விட்டு ஓடாதீர்கள்
உங்கள் கரங்களே செல்வம் பொய் இல்லை…

கருணையை விட்டு வாழாதீர்கள்
அக் கருணையே தெய்வம் வேறு இல்லை…!!!

மனதை கவர்ந்த சிந்தனைகள்