• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jan 3, 2023

சிந்தனைத்துளிகள்

பேசுவது திறமை அல்ல. தனது பேச்சால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராமல் பேசுவதே திறமை.

கோபத்தில் ஒருமுறை விட்ட வார்த்தைகளை மறுமுறை சரி செய்ய முடியாது. அப்படி முயன்றால் அது ஓட்டையான குடத்தில் தண்ணீர் நிரப்புவதற்கு சமம்.

நல்ல புரிதல் உள்ளவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. புரியாதவர்களுக்கு எவ்வளவு சொல்லியும் பயன் இல்லை.

எப்படி பேச வேண்டும் என்று கற்றுத் தர நிறைய பேர் இருக்கிறார்கள்.
ஏன் பேசாமல் இருக்க வேண்டும் என்று கற்றுத்தர
வாழ்க்கை மட்டுமே இருக்கின்றது.

நல்லதைக் கூட சில இடங்களில் பேசாமல் இருப்பதே நல்லது.