• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கன மழை பெய்ததது.

மேலும் சாத்தூர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான இருக்கன்குடி, மேட்டமலை,படந்தால்,சத்திரப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

மேலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த பலத்த மழை காரணமாக சாத்தூர் நகர் பகுதியில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.

மேலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் இன்று பெய்த கனமழையால் குளர்ச்சியான சூழ்நிலை உருவாகி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.