• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

வரிச்சியூர் செல்வம் கொலை வழக்கு விசாரணை.,

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்து பின் அவரிடமிருந்து பிரிந்து வந்த விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (32) என்பவர் கடந்த 2021ம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக, ரவுடி வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 7 பேர் மீது விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். விருதுநகரில் உள்ள 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ரவுடி வரிச்சியூர் செல்வம் உள்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரும் ஆஜாரானார்கள். அப்போது, வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாகவும், ஜூன் 16ம் தேதி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக நீதித்துறை நடுவர் ஐயப்பன் உத்தரவிட்டார்.