• Thu. Dec 12th, 2024

புளியங்குடியில் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி மரணம்!

Byஜெபராஜ்

Jan 25, 2022

புளியங்குடி முத்துராமலிங்கம் நகரை சேர்ந்த விவசாயி சூரியபாண்டி [39 ]. நேற்று முன் தினம் குளிப்பதற்காக புளியங்குடி கோட்டப்பாறை பகுதியில் உள்ள கிணற்றுக்கு சென்றவர், கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.

வெகு நேரமாகியும் சூர்யபாண்டி வீட்டிற்கு வராததால் அவரது மனைவி கற்பகவள்ளி மற்றும் உறவினர்கள் அவரை தேடி பார்த்தபோது கிணறுக்குள் இறந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக புளியங்குடி காவல் நிலையத்திற்கும், வாசுதேவநல்லூர் தீ அணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம், எஸ்ஐ பாரத்லிங்கம், வாசு தீ அணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா, போக்குவரத்து அலுவலர் பார்வதி நாதன், சிறப்பு நிலைய அலுவலர் மாடசாமி ராஜா மற்றும் வீரர்கள் பால்ராஜ், ஆனந்த் முருகன், ராஜதுரை ஆகியோர் சூரியபாண்டியின் உடலை மீட்டு, புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.