ஆளுநர் மாளிகை பெயரில் இயங்கும் போலி சமூகவலைதள கணக்குகளை நம்ப வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆளுநர் மாளிகை குறித்து பல்வேறு தகவல்கள் உண்மைக்கு புறம்பாகவும், தவறான தகவல்களை வெளயிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதை அடுத்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆளுநர் மாளிகை பெயரில் இயங்கும் சில போலி மின்னஞ்சல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையும் நடந்துவருகிறது. இப்படியான போலி கணக்குகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியும், @rajbhavan_tn என்ற ட்விட்டர் கணக்கும்தான் அதிகாரப்பூர்வமானவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.