தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை விடாமல் பெய்து வருகிறது. அதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் நேற்று மதியம் முதல் கனமழை பெய்தது. குற்றாலத்தில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் மெயின்அருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் பேரருவியில் முதல் பாலத்தை கடந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குற்றாலம் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து தென்காசி கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை விடாமல் பெய்து வருகிறது.