கனடா தலைநகர் ஒட்டாவாவின் முக்கியத் தெருக்கள் அனைத்தையும் லாரி ஓட்டுநர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அங்கு, திரும்பும் பக்கமெல்லாம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் நடத்தும் போராட்டம்தான் கனடா தலைநகர் ஒட்டாவாவை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. ஹாரன்கள், சைரன்கள், பட்டாசுகள் மூலம் அடிக்கடி ஒலியெழுப்பி போராட்டத்தைக் கொண்டாட்டமாக மாற்றியிருக்கிறார்கள் லாரி ஓட்டுநர்கள். 10 நாள்களுக்கு மேலாக நடக்கும் இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடிவருகிறது கனடா அரசு. திணறிவருகிறார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, கனடாவில் தொற்றுப் பரவலைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் குறிப்பாக, பொது இடங்களுக்கு வருபவர்களும், பொதுப் போக்குவரத்தில் பயணிப்பவர்களும் கட்டாயம் தடுப்பூசிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். லாரி ஓட்டுநர்கள் பயணம் மேற்கொள்ளவும் தடுப்பூசிச் சான்றிதழ் அவசியம்!' என்று கனடா அரசு உத்தரவிட்டிருந்தது. கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து, லாரி ஒட்டுநர்கள் பலரும் இதற்கு எதிராக குரல்கொடுக்கத் தொடங்கினர். கடந்த ஜனவரி 29-ம் தேதி அன்று, கனடா முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் தலைநகர் ஒட்டாவாவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். அன்றிலிருந்து, தினசரி பல நூறு லாரி ஓட்டுநர்கள் ஒட்டாவாவை அடைந்தனர். ஒட்டாவாவின் சாலையோரங்களில் கூடாரம் அமைத்து போராட்டங்களில் ஈடுப்பட்டனர். கட்டாயத் தடுப்பூசி உத்தரவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். முதலில், லாரி ஓட்டுநர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில், நாள்கள் செல்லச் செல்ல கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனநிலையிலிருப்பவர்களும் கலந்துகொள்ளத் தொடங்கினர். இதனால் கனடா அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்தது. முன்னதாக,
தலைநகரில் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்தோடு ரகசிய இடத்துக்குச் சென்றுவிட்டார்’ எனச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 நாள்களாக ஒட்டாவாவில் நடந்துவரும் இந்தப் போராட்டத்தால் கனடா அரசுக்குப் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் மிகப் பெரிய இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. லாரி ஓட்டுநர்களோ, `கட்டாய தடுப்பூசி உத்தரவை நீக்கிக் கொண்டால் மட்டுமே, போராட்டத்தைக் கைவிடுவோம்’ என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதனால், என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிவருகிறது கனடா அரசு.
இந்த நிலையில், போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவரக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தி உத்தரவிட்டார் ஒட்டாவா மேயர் ஜிம் வாட்ஸன். “போராட்டக்காரர்களைவிட கவால்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், போராட்டங்கள் எல்லைமீறிச் சென்று கொண்டிருக்கின்றன. ஒட்டாவா நகரத்தை மீட்டெடுக்க அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார் ஜிம் வாட்ஸன்.
இதையடுத்து கனடா நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்'' என்று வலியுறுத்தியதோடு லாரி ஓட்டுநர்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். பிப்ரவரி 8-ம் தேதி அன்று, தனது ட்விட்டர் பக்கத்தில்,
கனடா மக்களுக்குப் போராட்டம் நடத்தவும், தங்கள் அரசாங்கத்துடன் உடன்படாமல் இருக்கவும், தங்கள் குரல்களை அரசாங்கத்துக்குக் கேட்கச் செய்யவும் உரிமை உண்டு. அந்த உரிமையை நாங்கள் எப்போதும் பாதுகாப்போம். ஆனால், நமது பொருளாதாரத்தையோ, ஜனநாயகத்தையோ அல்லது நமது சக குடிமக்களின் அன்றாட வாழ்க்கையையோ முடக்க அவர்களுக்கு உரிமை இல்லை. அது நிறுத்தப்பட வேண்டும்!” என்று பதிவிட்டிருக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ.
- தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் செல்கிறது – ஓபிஎஸ்திமுக அரசு கொலை,கொள்ளை,தற்கொலை என்ற பாதைக்கு தமிழகத்தை அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]
- ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 7-ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் வெளியிட்ட […]
- மே.24ல் மேட்டூர் அணை திறக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்புகுறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை மே.24ம் தேதி திறக்கப்படும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக […]
- மாவீரனாக களம் கான இருக்கும் சிவகார்த்திகேயன்…தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவர் தமிழ் […]
- இதுதான் புதிய இந்தியா… நடிகர் மாதவன் புகழாரம்…பிரான்ஸ் நாட்டில் 75 வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் […]
- மகளை கொலை செய்த வழக்கில் இந்திராணிக்கு ஜாமீன்…மகளை கொலை செய்த வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திராணிக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
- ராஜீவ் கொலையாளிகளை கட்டியணைப்பதா- தி.மு.க.வுக்கு கண்டனம்ராஜீவ் கொலையாளிகளை கட்டியணைப்பது நெஞ்சை பிளக்கும் செயலாக உள்ளது- தி.மு.க.வுக்கு மயூரா ஜெயக்குமார் கண்டனம்முன்னாள் பிரதமர் […]
- நாய்க்குட்டியை திருடிச்செல்லும் இளைஞர்கள்-சிசிடிவி காட்சி வெளியீடுவீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த நாய்க்குட்டியை புல்லட்டில் வந்து திருடிச்செல்லும் இளைஞர்கள்-சிசிடிவி காட்சி வெளியீடு- காவல்துறை விசாரணை.மதுரை […]
- கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிருக்காங்களா..???தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் […]
- லாக்அப் மரணங்களை தடுக்க காவலர்களுக்கு பயிற்சி முகாம் -டி.ஜி.பி.சைலேந்திரபாபு தகவல்காவல் நிலையத்தில் ஏற்படும் லாக் அப் மரணங்களை தடுப்பது குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சியில் […]
- 1000 கோடி ஏலத்திற்கு விலைபோன உலக வரலாற்று கார்…உலக வரலாற்றிலேயே பழைய கார் ஒன்று ஏலத்தில் ஆயிரம் கோடிக்கும் மேல் முதன்முறையாக விற்பனையாகியுள்ளது. என்னதான் […]
- உக்கிரமான உக்ரைன்-ரஷ்யா போர்…உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளாவிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த போரால் பல […]
- தால் இட்லி:தேவையானவை:துவரம்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், புழுங்கல் அரிசி […]
- நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலை-மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் மற்றும் நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலையை முதல்-அமைச்சர் […]
- தமிழகத்தில் புதிய வகை கொரோனா..தமிழகத்தில் அமைக்க BA 4 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் […]