• Fri. Apr 19th, 2024

கலைவாணர் அரங்கத்தில் பரபரப்பு… விநாயகர் சிலையுடன் போராட்டம்!

கொரோனா 2வது அலை காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. தனிநபர்கள் மட்டும் வீடுகளில் சிலைகளை வைத்து வழிபாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளத். இதற்கு இந்து அமைப்புகள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று சட்டப்பேரவை நடைபெறும் கலைவாணர் அரங்கம் முன்பாக சிலை தயாரிப்பாளர்கள் கையில் விநாயகர் சிலையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலை தயாரிப்பாளார்கள் சங்கம் கலைவாணர் அரங்க வாயிலில் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு கைவினை காகிதகூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் கைவினை கலைஞர்கள், சிலை தயாரிப்பாளர்களுக்காக நல வாரியம் அமைக்க வேண்டும், கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்பை சரிப்படுத்த உரிய நிவாரணம் வழங்க வேண்டும், விநாயகர் சதுர்த்தி அன்று சிலை விற்பனை செய்ய முடியாததால் தாங்கள் வங்கியில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *