அதிமுக ஆட்சி காலத்தில் சேலம் மாநகராட்சி பல கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
தூய்மை இந்தியா, பாதாள சாக்கடை, ஸ்மார்ட் சிட்டி ஆகிய திட்டங்கள் மற்றும் அம்மா சுற்று சூழல் அரங்கம் அமைப்பதிலும் அதிமுக ஆட்சி காலத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டியுள்ளது. இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் வடக்கு மாநகரக்குழு சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சேலம் மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
அதில், சேலம் மாநகரத்தில் உள்ள நீர் ஓடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வழிபாதையை சீரமைத்திட வேண்டும். மாநகரத்தில் உள்ள பிரதான சாலைகளில் நடைபாதைகள், கண்காணிப்பு கேமிரா, தார்சாலை, சாக்கடை வசதிகளை உறுதி செய்திட வேண்டும். ரேஷன் பொருட்கள் பதுக்கல், கடத்தல் தடுத்திட வேண்டும். மாநகராட்சி பொதுக் கழிப்பிடங்களையும், பழுதடைந்த ஆழ்துளை மின் மோட்டர்களையும் சீரமைக்க வேண்டும் போன்ற மாநகர மக்களின் அடிப்படை தேவைகளை கோரிக்கையாக வழங்கினோம்.
அப்போது என்னுடன் மாநகரக்குழு உறுப்பினர்கள் பி.தமிழ்ச்செல்வன், பி.செந்தில்குமார், வி.முருகாணந்தம், பி.ராஜேஷ்குமார் மற்றும் ஆர்.மோகன் உடனிருந்தனர்.