• Sun. Sep 8th, 2024

6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு

ByA.Tamilselvan

Jul 22, 2022
School

தமிழக பள்ளிகளுக்கான முதல்பருவத்தேர்வுதேதிகளை பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த வருடம் சரியான தேதியில் பள்ளிகள் ஆரம்பித்திருப்பதால், முன்பிருந்தது போலவே பருவ தேர்வுகளை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை பருவத்தேர்வுகளை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.1 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 4 முதல் 12-ம் தேதி வரையும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் 12-ம் தேதி வரையிலும் முதல் பருவத் தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *