• Fri. Dec 13th, 2024

சுற்றுலா பயணம் முடிந்து சென்னை வந்தடைந்த அஜித்.. வைரலாகும் வீடியோ..

Byகாயத்ரி

Jul 22, 2022

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித். வலிமை வெற்றிக்கு பின் தனது 61வது படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறார்.

தற்போது அஜித் பிஸியாக நடித்து வரும் வேலைக்கு இடையில் இடைவேளை கிடைக்க வெளிநாடு பைக் சுற்றுலா சென்றிருந்தார்.குடும்பத்துடன் அவர் லண்டனில் வெளியே வந்த வீடியோக்கள், புகைப்படங்கள் டுவிட்டரில் சீறிப்பாயந்தன. இதையடுத்து அஜித் தன் 61வது படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்காக சென்னை வந்துவிட்டார்.

அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது டுவிட்டரில் வெளியாகியுள்ளது. வெல்கம் பேக் என்று இவரது ரசிகர்கள் கமென்ட் செய்து வருகிறார்கள்.