கனல் கண்ணனை கைது செய்யக்கூடாது என பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
ரஜினி ஆளுநரை சந்தித்ததில் தவறு இல்லை. மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கலாம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது “கனல் கண்ணன் பெரியார் சிலை அகற்றம் குறித்து பேசியதில் தவறில்லை. இதற்கு முன் சோ.ராமசாமி கூட பேசியுள்ளார். அதனால் கனல் கண்ணனை காவல்துறை கைது செய்யக்கூடாது.அதே போல் காவல்துறை ஆளுங்கட்சியின் கைக்கூலியாகவும் செயல்படக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
