• Sat. Jul 4th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

அனிதா ராதாகிருஷ்ணன் தவமிருந்து முதல்வர் காலில் விழுந்தாலும் த. வெ. க கழகத்தில் சேர்க்க மாட்டோம்.- சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,

ByKalamegam Viswanathan

Jul 4, 2026

தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:

அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார் அவர் பேசியதை பார்த்திருப்பீர்கள். முதல்வரை தனிப்பட்ட முறையில் எவ்வளவு கேவலமாக பேசினார். அவர் வாய்க்கொழுப்பில் தேவையில்லாமல் அவதூறாக மோசமாக பேசியிருக்கிறார். கருணாநிதி காரணத்திலிருந்து இப்படித்தான் பேசுவார்கள், குடும்பத்தை பற்றி பேசுவது தான் கருணாநிதி காலத்திலிருந்து திமுகவின் வழக்கம். அவருடைய முன் ஜாமின் ரத்து செய்யப்பட்டு காவல்துறை கைது செய்தது வழக்கமாக நடப்பது தான். இது சாதாரண நடைமுறை ஆனால் அவர் பேசியதற்கு வழக்கபோடாமல் இருக்க முடியாது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தோல்வி பயத்தில் திமுகவினர் இதே போல் தான் பேசுகிறார்கள். முன்பு திமுகவினர் அதிமுகவினரை பேசுவார்கள் இப்படித்தான் நடைபெற்றது. முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் யாருக்கும் செட்டில்மெண்ட் செய்ய முடியாது, ஊழல் தவறு செய்தால் வழக்கு, தேவையில்லாமல் அவதூறு பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும். ஊழலுக்கு செட்டில்மெண்ட் செய்ய முடியாது. இங்கு எங்கும் எதிலும் ஊழல் கிடையாது. வேறு வழியே இல்லாமல் தேவையில்லாமல் பேசுகிறார்கள். அவர் ராஜினாமா செய்து விட்டு சேர சொன்னதாக சொல்கிறார். அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற ரவுடியையும், கேவலமான நபரையும் தவம் இருந்தாலும் தமிழக வெற்றி கழகத்தில் சேர்க்க மாட்டோம். கேவலமான ரவுடித்தனமான தென் தமிழகத்தில் அனைத்து விரோதமான ரவுடித்தனமும் செய்பவர் அனிதா ராதாகிருஷ்ணன் கட்டப்பஞ்சாயத்து செய்பவர். 20 ஆண்டுகளாக கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு ரவுடித்தனம் செய்தவர். அனிதா ராதாகிருஷ்ணன் அவரைப் போன்ற நபர்கள் தவம் இருந்தாலும் தமிழக வெற்றி கழகத்தில் சேர்க்க மாட்டோம். அதை திசை திருப்புகிறாராம், அவ்வளவு பெரிய அறிவாளியாம் அவர். அவர் தவமிருந்து முதல்வர் விஜய் காலில் விழுந்தாலும் தமிழக வெற்றி கழகத்தில் சேர்க்க மாட்டோம். அவர்கள் அனைவரின் மீதும் ஊழல் வழக்குகள் உள்ளது.

நெடுஞ்சாலைத்துறை ஊழல் இருப்பதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரத்தின் அடிப்படையில் வழக்குகள் நடைபெறும். பழைய காலத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் வீர வசனம் பேசிவிட்டு வழக்கு பதிவு செய்யாமல் பணத்தை பெற்றுக்கொள்வார்கள். இது அந்த மாதிரியான ஆட்சி இல்லை. யாராக இருந்தாலும் தவறு செய்தால் சட்டபூர்வமான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். அவர் குதிரை பேரம் செய்ததை ஆதாரத்துடன் எங்கள் எம்எல்ஏ மூலம் சொல்லி இருக்கிறோம். அதுபோல எங்கள் பக்கம் நாங்கள் யார் மூலமாக அவரை அழைத்தால் சொல்லுங்கள்.

எங்களிடம் எம்எல்ஏ எண்கள் உள்ளது. இன்று தேர்தல் நடைபெற்றாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் மக்களுக்குத்தான் பயந்து நாங்கள் ஒவ்வொரு நாளும் வேலை பார்க்கிறோம். யாருக்கும் பயப்படவில்லை. ஸ்டாலின் உட்பட யாருக்கும் பயப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் தலைவர் பல அழுத்தத்தை தாண்டி எங்கும் சமரசம் செய்து கொள்ளவில்லை. அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற ஆட்கள் இன்னும் திமுகவில் இருக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் செய்த தவறுக்கு வழக்கு பதிவு செய்யப்படும். அமைச்சராக இருந்தபோதே அவர்கள் கட்சியில் கைது செய்யப்பட்டபோது பேண்டில் யூரின் போனார்கள். தான் இப்போது காரில் ஏறும் போது அவரை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்க்க சொன்னது யார் என ஆதாரத்துடன் கொடுத்தால் நாங்கள் கேட்கிறோம். செய்த தவறுக்கான வழக்குகள் தான் அது எந்த விதத்திலும் பழி வாங்கும் எண்ணம் இல்லை. எங்கள் தலைவருக்கு இவர் ஒரு பொருட்டே இல்லை. மக்கள் பணத்தை கொள்ளையடித்து குடும்பத்தை வளர்த்தவர்கள். இன்று மக்களுக்காக பத்து முதல் 12 நேரம் மக்களுக்காக வேலை செய்யும் முதல்வர் மக்களின் உண்மையான முதல்வருக்கு இவர் ஒரு பொருட்டே இல்லை.

மாற்றுக் கட்சியில் இருந்து சேர வருபவர்கள் சேருவார்கள். ஆனால் யாரிடமும் சமரசம் கிடையாது. இன்னும் கட்சியில் சேர நினைத்தவர்களை நாங்கள் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறோம். கட்சியில் சேர வேண்டாம் என்று தடுத்திருக்கிறோம். அனிதா ராதாகிருஷ்ணன் வந்த பிறகு தென் தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து ரவுடித்தனங்கள் நடைபெற்றுள்ளது திருநெல்வேலி, தூத்துக்குடியில் கேளுங்கள். அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து படுகொலை ரவுடித்தனங்கள் பல நடைபெற்றுள்ளது.

குதிரை பேரத்தில் யாருக்கு தொடர்பு இருந்தாலும் காவல்துறை கைது செய்வார்கள். அதை தெரிந்து கொள்ள வேண்டிய அதிகாரம் எங்களுக்கு இல்ல. காவல்துறை விசாரணையில் தலையிடும் அதிகாரம் யாருக்கும் இல்லை. ஆதாரமில்லாமல் யாரும் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது. செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக்கிற்கும் தொடர்பு இல்லாமல் அவர்களுக்கு கீழே இருப்பவர்கள் பேச முடியுமா. செந்தில் பாலாஜியும் செய்ய முடியுமா ஸ்டாலின் சொல்லாமல், உதயநிதி சொல்லாமல் செந்தில் பாலாஜி இதை செய்ய மாட்டார். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என திமுக தலைமை சொல்லாமல் செந்தில் பாலாஜி செய்திருக்க மாட்டார். இதை யாரும் தன்னிச்சையாக செயல்பட முடியாது அப்படி செய்தாலும் இந்த பிரயோஜனமும் இல்லை.

செந்தில் பாலாஜிக்கு மேலே இருந்து உத்தரவு வந்தால் தான் இதை செய்ய முடியும். ஆதாரம் இருக்கும் பட்சத்தில் தான் கைதுகள் செய்யப்படுகிறது. ஆதாரங்களை காவல்துறை சேகரித்து தான் கைது செய்வார்கள். யாருக்கு தொடர்பு இருந்தாலும் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள். 30 நாள் இந்த ஆட்சி தாங்காது என ஸ்டாலின் எந்த அடிப்படையில் சொன்னார் திடீரென உதயநிதி ஸ்டாலின் எதற்காக துபாய் சென்றார் அங்கிருந்து என்ன ஆலோசனை செய்து செய்கிறார்கள் எல்லாத்திற்கும் அவர்கள் தான் விளக்கம் கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற மூன்றாம் தர ஆட்களை ஏவி விட்டு செய்கிறார்கள்.

யார் தவறு செய்திருந்தாலும் வழக்கு செய்யப்பட்டு தான் ஆக வேண்டும். ஸ்டாலின் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு பதில்

கடந்த ஆட்சியில் வழக்குகள் நிலுவையில் இருந்தது அதற்கு காரணம் சிட்டிங் அரசியல். மக்கள் வரிப்பணத்தை திருடியவர்கள் மீது ஆதாரம் இருந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள்.

வரப்போகும் இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களை அவர்கள் சந்திக்கட்டும் தேர்தல் முடிந்து 40 நாட்கள் தான் ஆகிறது நீங்கள் தேர்தலை சந்தித்த லட்சணம் தெரியும். ஸ்டாலினை கொளத்தூரில் தோல்வியுற்றிருக்கிறார் இதுவரை திமுக தலைவர் தோல்வியுற்றதே கிடையாது. மோசமான காலத்தில் அனைவரும் தோற்றபோது கூட கருணாநிதி ஜெயித்தார் அதைவிட மோசமான காலம் ஸ்டாலின் ஆட்சி செய்திருக்கிறார். இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் புரட்சித்தலைவர், அம்மா சொன்னதைப்போல எங்கள் தலைவரும் திமுக தீய சக்தியை ஒழிக்க வேண்டும் என சொல்கிறார். திமுக தலைவர் எப்போது தோற்றாரோ அப்போதே அந்த கட்சியின் அத்தியாயம் முடிந்துவிட்டது. அந்தக் கட்சிக்கான உயிரோட்டமே இல்லை அதை வழிநடத்த யாரும் இல்லை. ஸ்டாலின் அந்த கட்சிக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அந்தக் கட்சியில் உள்ள அனைத்து பொறுப்புகளையும் அவர்கள் குடும்பம் ராஜினாமா செய்ய வேண்டும். அறிவாலயத்தை அண்ணா தொண்டர்களின் வரிப்பணத்தில் கட்டினார். அதேபோல அந்த அறிவாலயத்தை தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அப்போதுதான் அந்த கட்சி பிழைக்கும்.

அவதூறு வழக்கு அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற வாய்க்கொழுப்பு இருப்பவர்கள் யாராக இருந்தாலும் வழக்கு தொடுப்போம். மைக்கை கையில் பிடித்து என்ன வேண்டும் என்றாலும் பேசலாமா. நீதிமன்றமே முன்ஜாமினை தள்ளுபடி செய்தது அப்படியென்றால் கைது செய்யப்பட வேண்டும் தானே.

ஒருவரின் செயல்பாடுகளைப் பற்றி பேசுவதற்கும், தனிப்பட்ட முறையில் பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இதற்குமேல் இவர்கள் கேவலமான செயலை செய்ய முடியாது. 40, 50 கோடி கொடுத்து எம்எல்ஏ வை தூக்க வேண்டும் என்று வேலை செய்தால் இதைவிட கேவலமான வேலை செய்ய முடியாது. 25 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி அரசியல் செய்தார்கள் அவர்களுக்கான காலம் முடிந்துவிட்டது.

டிடிவி தினகரன் சொன்னதை மறுநாளே அவரின் எம்எல்ஏ மறுத்தார். அவர்களுக்குள்ளயே மாற்றி மாற்றி இருந்தால் அழுத்தம் தான் காரணம். நாங்கள் யாரிடமும் பேரம் பேசவில்லை எங்களுக்கு அதற்க்கு அவசியமும் இல்லை. நாங்கள் அவசரப்பட்டு இருந்தால். அதிமுக தயாராக இருந்தார்கள் ஆனால் யாரிடமும் எங்கள் தலைவர் சமரசம் செய்து கொள்ள மாட்டார். அதற்கு எந்த தேவையும் இல்லை. அன்றைக்கே எங்கள் தலைவர் மீண்டும் தேர்தலை சந்திக்க தயாராக இருந்தார். அன்று ஒரு மணி நேரம் தாமதமாக இருந்தால் தேர்தலை சந்திக்க தயாராக இருந்திருப்போம். எங்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். அன்று ஒரு மணி நேரம் தாமதமாக இருந்தால் தேர்தலை சந்திக்க எங்கள் தலைவர் 100% தயாராக இருந்தார். அதற்கான வெளிப்பாடு எங்களிடம் வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் எங்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆதரவு அளித்த காரணத்தால் தான் கவர்னர் அலுவலகத்தில் நாங்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்தோம். அது மட்டும் நடக்கவில்லை என்றால் எங்கள் தலைவர் தேர்தலை சந்திக்க நூறு சதவீதம் தயாராக இருந்தார். எங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் அது தெரியும்.

முதல் நாள் ஆளுநரை ஆட்சி அமைக்க வேண்டும் எனக் கூறிவிட்டு மறுநாள் எடப்பாடியை முதல்வராக்க பேசிய ஸ்டாலினை எப்படி நம்புவீர்கள். ஆதாரம் கிடைப்பதற்காக காத்திருக்கிறோம். இன்று வரை அவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள் என்று எப்படி சொன்னோம். ஆதாரத்துடன் எங்கள் எம்எல்ஏ மிரட்டப்பட்டதை கொடுத்து கைது செய்தோம். பாரதிய ஜனதா கட்சியின் முழு ஆதரவு உள்ளது அதன் பின் எடப்பாடியும் உள்ளார்.

எடப்பாடியும் ஸ்டாலினும் ஆட்சி அமைக்க முயற்சி செய்தார்கள். நீங்கள் ஒரு தரமான எதிர்கட்சியாக செயல்பட வேண்டும். அதற்கும் துப்பு இல்லை. வீட்டுக்குள் இருந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தீர்கள். மக்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்களுடன் பயணிக்க வேண்டும் என நினைத்து வருகிறார்கள். எடப்பாடியார் போன்ற தலைமைக்கு கீழ் எப்படி செயல்பட முடியும் என்று யாராவது ஒருவரிடம் கேட்டுப் பாருங்கள். மக்களை எப்படி சந்திப்பார்கள். அவர்கள் கட்சி அலுவலகத்திற்கு யாரும் போவதில்லை எப்படி பொய் அவர்கள் மக்களை சந்திப்பார்கள். அதிமுகவில் வெற்றி பெற்ற யாரும் தொகுதிக்குள் சென்று மக்களை பார்க்க முடியவில்லை. ஒன்று வீட்டுக்குள் முடங்கி இருக்கிறார்கள் இல்லை என்றால் சென்னையில் இருக்கிறார்கள். யார் யாருக்கெல்லாம் தைரியம் இருக்கிறதோ அவர்கள் பாதையை அவர்களே தீர்மானிக்கிறார்கள். யாரையும் அழைக்கவில்லை அவர்களே ராஜினாமா செய்து வெளியே வந்து எங்கள் தமிழக வெற்றி கழகத்தில் சேர்கிறார்கள் யார் இணைந்தாலும் எங்கள் கொள்கையில் எந்தவித சமரவசமும் இல்லை. எந்த மோதகமான சூழலிலும் எங்கள் தலைவர் சமரசம் செய்ய மாட்டார்.

எங்கள் தலைவர் மக்களுக்கு மட்டும்தான் பயந்து செயல்படுவார் எந்த கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார். ஒரு சதவீதம் கூட அதற்கு வாய்ப்பில்லை.

ஸ்டாலினும் எடப்பாடியும் மக்களை தவறாக கணிக்கிறார்கள். பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என தேர்தலை சந்தித்ததால் தான் தோல்வி பெற்றீர்கள். மக்களை நினைக்கவில்லை காசு கொடுத்து எதையும் வாங்கலாம் என்று தான் இன்றும் நினைக்கிறீர்கள். 20 எம்எல்ஏக்களை வாங்கி விட்டு போய் மக்களை சந்தித்து விடுவீர்களா? கூவத்தூரில் நடைபெற்றதே மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் என்றும் தேர்தலை சந்திக்க பயமில்லை எங்களிடம் எந்த பதட்டமும் இல்லை. நாங்கள் பணி மாற்றம் செய்வதற்கு பத்திரப்பதிவு செய்வதற்கு எதற்காவது காசு வாங்கியிருக்கிறோமா. மக்களை சந்திக்க எங்களுக்கு பயமில்லை. வீட்டு வசதி வாரியத்தில் முன்பெல்லாம் கமிஷன் வாங்கினார்கள் இப்போதும் அது இல்லை. வெறும் 3 லட்ச ரூபாயுடன் தான் தேர்தலை சந்தித்தோம் மீண்டும் தேர்தல் நடந்தால் அப்படியே சந்திக்க தயாராக இருக்கிறோம். யாரு தவறு செய்திருந்தாலும் வழக்குகள் பதியப்படும் என கூறினார்.