திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறுதி ஊர்வலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா (46). இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மூத்த மகன் ஆவார். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவியும், சமணா என்ற மகளும் உள்ளனர். திருமகன் ஈவெரா கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள குடியரசு இல்லமான தனது வீட்டில் தங்கி இருந்து தொகுதி பணிகளை செய்து வந்தார். தொகுதி தொடர்பான பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளை நேரில் சந்தித்து நிறைவேற்றி வந்தார். காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி மாற்று கட்சியினர் மற்றும் பொதுமக்களுடன் எளிமையாக பழகி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. ஈரோட்டில் உள்ள தனது வீட்டில் தங்கி வழக்கம்போல் தொகுதி பணிகளை செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதற்காக தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் மாரடைப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் இருந்தவர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடல் கச்சேரி வீதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறந்த தகவல் கிடைத்ததும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், மாற்று கட்சியினர், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறந்த தகவல் கிடைத்ததும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னையில் இருந்து தனது குடும்பத்துடன் ஈரோட்டுக்கு வந்தார். அங்கு தனது மகனின் உடலை பார்த்து இளங்கோவன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதைப்பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களும் கதறி அழுதனர்.




இன்று அஞ்சலி செலுத்திய முக்கிய தலைவர்கள்
சட்டமன்ற தலைவர் அய்யாவு, கார்த்திக் சிதம்பரம், மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, மேட்டூர் தொகுதி எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், ஜோதிமணி. செல்வ பெருந்தகை செல்வகுமார், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கே வி தங்கபாலு, ஜி கே வாசன் ஆகியோர் இன்று கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
பகல் ஒரு மணிக்கு ( கச்சேரி வீதி இ வி கே இளங்கோவன் குடியரசு இல்லத்தில் இறுதி சடங்குகள் நடந்து அங்கிருந்து தொடங்கி பன்னீர்செல் பூங்கா, மணிக்கூண்டு, காவேரி ரோடு வழியாக திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மின்மயானத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிற்பகலில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு ஆத்மாவில் அனைத்து கட்சி கூட்டமும் சேர்ந்து இரங்கல் கூட்டம் நடத்தினர்.
திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்களும் வழிநெடுக மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
- மதுரை அரசரடி நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு- பொதுமக்கள் அதிருப்திகுடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை சரியாக பாராமரிக்க வேண்டும் மதுரை அரசரடி […]
- மஞ்சூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகம் மஞ்சூர் […]
- சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைதிருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமிகோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மதுரை […]
- தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டும் வன விலங்குகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை […]
- ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய திமுகவின் ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை […]
- முதுமலை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணியினை உடனே துவங்க கோரிக்கைமுதுமலை புலிகள் காப்பகம் அருகே பழங்குடியினர் மற்றும் வளர்ப்பு யானைகள் நடக்க உதவும் வகையில் புதிய […]
- வாடிப்பட்டியில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் […]
- வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம்வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதுமதுரை வாடிப்பட்டி […]
- ராமேஷ்வரம் கடலில் வீசப்பட்ட தங்ககட்டிகளை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்இலங்கையிலிருந்து- ராமேஷ்வரம் வழியாக தங்ககட்டிகள் கடத்தி வந்து போலீசார் சுற்றி வளைத்ததால் கடலில் வீசியதாகவும் அதனை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு […]
- ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிடஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய […]
- ஆயிரம் ஆண்டு பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு..!விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமமாகக் கருதப்படும் எண்ணாயிரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. பொருள் (மு.வ): ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் […]