• Tue. Apr 22nd, 2025

புனித சிலுவை கல்லூரியில் மாணவியர் மன்றம்..,

நாகர்கோவிலில் அருட் கன்னியர்கள் நிர்வாக கல்லூரியான திருசிலுவை மகளிர் கல்லூரியில். மாணவிகளின் அமைப்பான “குயில் தோப்பு”அமைப்பின் சார்பில் நடைபெற்ற விழாவில். பொது நல ஆதரவாளரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆன முனைவர். பசலியான்நசரேத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விழாவில்.

ஒளியால் இருள் அகற்றும் குத்து விளக்கு ஏற்றும் நிகழ்வில். கல்லூரியின் முதல்வர் அருட் சகோதரி,பேராசியர்களான அருட் சகோதரிகள்,சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க.

குயில் தோப்பில் ஒளி பரவியது மாணவிகள் எழுப்பிய கை ஓசைகளுடன்.

குயில் தோப்பு ஒருங்கிணைப்பு மாணவியின் வரவேற்பு உரைக்கு பின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முனைவர் பசலியான் நசரேத் பேச்சு இப்படி தொடங்கியது.

நம் தாய் தமிழில் இரட்டர மொழிதல் என்ற ஒரு பாங்கு உண்டு. மாணவிகளின் விழாவில் அந்த அற்புதம். சொல்லுக்கு மற்றொரு சொல்லாக.குயில் தோப்பு வார்த்தைக்குள் நம் மீசை வைத்த முண்டாசு கவிஞரை பார்க்கிறேன். அதே நேரத்தில் சற்றே ஒலிக்கும் குயிலின் ஓசையையும் கேட்கிறது.

ஆணுக்கு,பெண் அடிமையா ? என்று அன்றே குரல் எழுப்பிய பாரதியை
புனித சிலுவை கல்லூரியில் நடக்கும் மாணவியர் விழாவில் நீங்கள் கொண்டாடுவதை காணமுடிகிறது.

நாடாளுமன்றத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு.அவசர, அவசரமாக பெண்களுக்கு 33. சதவீதம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். நிறைவேற்றப்பட்ட சட்டம் இன்று பரண் மீது தூசி படிந்து கிடக்கிறது.

பெண் விடுதலை பற்றி பாரதியார் கண்ட கனவுகளை. நம் ஊர் கலைவாணரும் கண்டார். ஒரு பெண் தெய்வத்தின் பெயரால் ஆன இந்த மாவட்டத்தின் தனித்த பெருமை.

மனித வாழ்வில் பள்ளி படிப்பை கடந்த கல்லூரி காலம் என்பது ஒரு மறக்கவே முடியாத வசந்த காலம். கனவுகளுக்கு சிறகுகள் முளைக்கும் காலம். அந்த குறிப்பிட்ட காலத்தில் எதிர் காலம் குறித்த ஒரு நிலைத்த முடிவை எடுக்கும் காலம். எடுத்த முடிவில் உறுதியாக இருந்து இலங்கை அடைவதே உங்கள் ஒவ்வொருவரின் இலட்சியமாக இருக்க வேண்டும் என பேசி உரைமுடித்தார் சிறப்பு விருந்தினர்.