தென்காசி மாவட்டம், புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் நல்ல மழை பெய்து நீர்பிடிப்பு ஏற்பட்டதால், அங்குள்ள விவசாயிகள் நெற்பயிர் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனத்துறையின் மூலமாக சோலார் மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தது. அதை வனத்துறையினர் சரிவர பராமரிக்காததால் பயனற்று கிடக்கிறது. அதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள யானைகள், மான், மிளா, காட்டுப்பன்றி மற்றும் வனவிலங்குகள் விவசாயப் பகுதிகளில் புகுந்து விவசாயப்பயிர்களை நாசம் செய்கின்றன!

தற்போது செம்போடை பகுதிகளில் யானைகள் புகுந்து நெர் பயிர்களை நாசம் செய்து வருகின்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது சம்பந்தமாக அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘மாநில அரசால் வனத்துறையினர் மூலம் சோலார் மின் வேலி அமைக்கப்பட்டு இருந்தது! அது வனத்துறையினர் சரிவர பராமரிக்காததால் வீண் அடைந்து விட்டதால் வனவிலங்குகள் விவசாய பகுதிகளில் வந்து விவசாயிகளை தாக்கிய சம்பவம் நடந்ததுள்ளது!

எனவே சோலார் மின் வேலியை சரி செய்து வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் வராத வண்ணம் பாதுகாப்பு தரும்படி வனத்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பாற்றி தர வேண்டும்’ என்றனர்!