
கேரளாவில் தண்ணீர் குடிக்க வந்த யானை கழிவு நீர் தொட்டியில் விழுந்து பலி.. வனத்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் காட்டு யானை ஒன்றின் பிளிறல் சத்தம் கேட்டப்படி இருந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அங்குள்ள கழிவு நீர் தொட்டிக்காக தோண்டப்பட்ட குழியில் காட்டு யானை ஒன்று விழுந்து இறந்து கிடந்தது. ஊருக்குள் தண்ணீர் குடிக்க வந்த யானை, அங்கிருந்த குழியில் தவறி விழுந்து இறந்து உள்ளது. இதனை தொடர்ந்து யானையின் உடலை அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
