• Mon. Jan 20th, 2025

ஆட்டம் கண்ட வீடுகள்… தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்

ByIyamadurai

Dec 26, 2024

தஜிகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

தஜிகிஸ்தானில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் வீடுகளில் இருந்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தஜிகிஸ்தானில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலத்துக்கு அடியில் சுமார் 130 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, உயிர்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.