• Wed. Oct 5th, 2022

அடுத்த தலைமுறை வாழ்வதற்கே தகுதி இல்லாத இடமாக பூமி மாறிவிடும் புவியியல்பேராசிரியர் முதுமுனைவர்- அழகுராஜா பழனிச்சாமி

Byதரணி

Sep 20, 2022

பொதுவாக நாம் இப்போது வாழ்ந்து வரும் சுற்றுச்சூழல் அமைப்பே கிராமம் நகரம் புறநகர் என்ற நிலையில் அறிந்து கொண்டுள்ளோம். இந்த வகைப்பாடு என்பது பொருளாதார மற்றும் அடிப்படையாகக் கொண்டு புரிந்து உணர்கிறோம் இதில் முக்கியமாக ஆடம்பரமான நாகரீகமான வாழ்வு என்பது நகரங்களில் தான் காண முடியும். கிராமங்கள் என்பவை மேற்கண்ட நிலையில் வளர்சி அடையாமல் இருக்கிறது அங்கு ஆடம்பரமான நாகரிக வாழ்வு கிடையாது என்றும் பொதுவான மாயை நமக்குள்ளே நாம ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் இதில் புறநகர் என்பவை இரண்டும் இடையில் திண்டாடிக் கொண்டிருக்கிறது ஆனால் இது அனைத்துமே ஒரு வகையில் உண்மைக்கு புறம்பான கற்பனைகளே.
உண்மையில் சுற்றுச்சூழல் என்பது அடுக்குமாடி குடியிருப்புகளையும் நெடுஞ்சாலைகளும் பாதங்கள் மண்ணில் படாத அளவுக்கு பளபளப்பு தரைகளும் குளிர்சாதன பெட்டிகளும் தொலைக்காட்சிகளும் கிடையாது மாறாக சுற்றுச்சூழல் என்பது இயற்கையே குறித்து நிற்கும் ஒரு அற்புதமான கலைச்சொல் . நகரங்கள் நகரங்கள் என்று நாம் எல்லோரும் மோகம் கொண்டு கூட்டமாக வாழ்கிறோமே அது நகரமல்ல உண்மையிலே அவை நரகங்கள் அங்கு அடிப்படையில் மனிதனுக்கு கிடைக்க வேண்டிய சுத்தமான நீர் கூட பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உள்ளது. வேதிப்பொருட்கள் கலக்காத காய்கறிகளையும். தேடினாலும் கிடைக்காத சூழல் உள்ளது. உயிர் சுவாசமே இங்கு மாசக் கலைதான் உள்வாங்கி உயிர் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய சூழல் இது சுற்றுச்சூழல் இதுதான் வளர்ச்சியா. இங்கு காற்று மண் ஒளி வீண் என அனைத்தும் மாசுபட்டு கிடக்கிறது.

ஆனால் கிராமங்கள் அப்படியல்ல கிராமங்கள் என்ற உடனே நம் கண்ணுக்கு புலப்படும் அல்லது நாம் நினைவுக்கு எட்டும் காட்சிகள் முழுக்க இயற்கை சூழலில் நிரம்பிக் காணப்படும் ஒரு குழந்தையை அழைத்து ஒரு கிராமம் என்ற தலைப்பில் ஓவிய வரியை சொன்னால் இரண்டு மலை முகடுகள் அதன் அடிப்படையில் கூட்டமாய் மரங்கள் அதன் அருகில் ஒரு ஆறு ஆற்றின் படகு அருகில் ஒரு குடிசை அதன் அருகில் இருமாடுகள் விண்களில் சூரியன் உதித்து நிற்க அதன் ஒளிக்கீற்றில் பறவை கூட்டங்கள் சிறகடிப்பது வயல்வெளி பெண்கள் நாட்டு நடுவது உழவன் ஏர் ஓட்டுவது மரத்தின் கிளை நிழலில் தொட்டிலில் குழந்தை இப்படி அதில் ஓவியத்தளம் நீண்டு கொண்டே போகும் .
உண்மையில் நம் ஆதித்தமிழர்கள் இப்படிப்பட்ட இயற்கை சூழலில் தான் தன் காலத்தை அழகாக கழித்து வந்தான் சங்கத்தமிழர் நிலத்தை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்று பகுத்து வாழ்ந்து வந்தான் அதன் தொடர்ச்சியை நான் மேல் சொன்ன கடைசி காட்சி. ஆனால் இன்றைய சூழலில் கிராமங்கள் என்பவை கூட முன் சொன்ன அடையாளங்களை இழந்து கொண்டு வருகின்றது மலை சரியாக பொழிவதில்லை அதனால் நிலத்தடி நீரும் நீர்நிலைகளுக்கான நீரும் இருப்பதில்லை. இதன் விளைவு மண்வளம் இருப்பதில்லை ஆதலால் விவசாயம் நடப்பதில்லை சரியாகத்தான் கூறியுள்ளான் வள்ளுவன் நீரின்றி அமையாது உலகு என்று ஆனால் பருவமழை கூட இன்று சரியான நேரத்தில் சரியாக விகிதத்தில் பெய்வதில்லை காரணம் மனிதனின் ஆக்கிரமிப்பு வேதிப்பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியும் காற்றை மாசு படுத்தியும் வளிமண்டலத்தை மாசு படுத்தியும் இயற்கையின் சுழற்சியை குடிப்பு நிலைக்கு தள்ளி உள்ளார் .மரங்களை வெட்டியும் காடுகளை அழித்தும் விலங்கினிகளை அழிக்கும் மனிதன் தன் இனம் மட்டுமே வாழ்ந்தால் போதும் என்ற சுயநலத்தில் இவ்வுலகில் அனைத்தையும் பெரும் சுரண்டலுக்கு உட்படுத்தி வருகிறான் .
ஆனால் இவர் தலைமுறைக்கு அனைத்தையும் சுரண்டிவிட்டால் அடுத்த தலைமுறை வாழ்வதற்கே தகுதி இல்லாத இடமாக பூமி மாறிவிடும் அபாயம் ஏற்படும் என்ற அச்சமும் விழிப்புணர்வும் நம்மிடையே யாருக்கும் இல்லை. இவ்வுலகில் எல்லாவற்றும் அடிப்படை இயற்கையே நீர் என்பது அதில் முதன்மை அதைத் தொடர்ந்து மரங்கள் காடுகள் விலங்கினங்கள் காற்று என்று இதன் அத்தியாவசியம் அனைத்தும் இயற்கையை மையப்படுத்திய மனித வாழ்வு இயங்கி வருவதை எவரும் புரிந்து கொள்வதில்லை. இந்த இயற்கை எல்லாம் அழித்துவிட்டு எந்த காலத்திலும் அவனால் இயந்திரங்களையோ இரும்பு பொருட்களையோ உண்ண முடியாது. எந்த காலத்திலும் மனிதனுக்கு இயற்கை உணவை வழங்க முடியும். இறுதியாக உலக நாடுகள் அனைத்தும் ஒரு அச்சத்தில் சூழ்ந்துள்ளது சமீபத்திய செய்தி புவி வெப்பமாகி வருகிறது இதன் விளைவாக உலகில் பணிமனைகள் பல உருகிவிட்டன கொஞ்சம் கொஞ்சமா இயற்கை சீற்றங்களை வரத் தொடங்கிவிட்டன பருவநிலைகள் ஒரு குலைந்து வருகின்றன. இப்படியே போனால் புவி உள்ளதே தகுதி இல்லாத மலட்டுத்தன்மை பெற்று விடும் என்கிறது சில புள்ளி விவரங்கள் அதனால் கடந்த செப்டம்பரில் ஐநா சபை மூன்றாண்டுகள் போராடி 29 நாடுகள் கடைக்கூட்டி புவி வெப்பமாவதை தடுக்க சில கட்டுப்பாடுகளை விதித்தது.
ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இதற்கு உடன்படவில்லை இந்த பொதுக்கூட்டம் தோல்வியில் முடிந்தது இவற்றைப் பற்றி எல்லாம் ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும் நம் சுற்றுச் சூழலை புரிந்து கொள்ள வேண்டும் சூழலில் என்பது இயற்க்கை அழித்து வாழ்வது அல்ல இயற்கையோடு கைசேர்த்து வியந்து வாழ்வது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை பேரழிவுகளை அறிஞர்கள் மூன்று வகையாக பிரிகின்றன இயற்கையாக நிகழும் பூகம்பம் சுனாமி வெள்ளம் எரிமலை சீற்றம் புயல் முதலானவை முதல் வகை இவற்றை நம்மால் ஓரளவு கணிக்க இயலும். இரண்டாவது மனிதனால் உருவாக்கப்படுபவை போபாலில் நிகழ்ந்த விஷவாயு நிகழ்வு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் (TWIN TOWERS) தாக்குதலால் நிகழ்ந்த அழிவுகள் மூன்றாவது வகை தொற்றுநோய் மாதிரியான நிகழ்வுகள் உருவாகும் இறப்புகள் சமீபத்தில் உருவான பன்றிக்காய்ச்சல் சார்ஜ் பரவிக்காற்றல் எய்ட்ஸ், கொரோனா முதலான எதிர்பாராத கிருமி தொற்றால் பலர் மடிவது.உதகமண்டலத்தில் காடுகளை அழித்ததால் உருவான வெள்ளப்பெருக்கு. .பலவகையிலும் பேரழிவு உருவாகி வருகின்றன. தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டபோது அது குறித்து படித்தவர்களுக்கு கூட சரியான விழிப்புணர் இல்லை அந்த சமயத்தில் அரசும் தனியார் தொண்டு நிறுவனங்களும் பெரும்பளவில் தடுமாறினார். அண்மையில் பன்றிக்காய்ச்சல் கொரோனா நாடு அங்கு பரவிய போது மக்களுக்கு அது குறித்து விழிப்புணர் உண்டாக்குவது தேவையற்ற அச்சத்தை உண்டாக்கும் ..பேரிடர் நிகழ்வுகள் உருவாக நேரங்களில் எப்படி மக்களை காப்பாற்றுவது ஒருங்கிணைப்பது அவர்களுக்கு தேவையான உணவு மருந்து முதலான உதவிகளை உடனுக்குடன் வழங்குவது பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு எப்படி மக்களை பாதுகாப்பாக இடமாற்றுவது என்பதும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை தருவதும் நமது கடமையாகும்.


இயற்கை சீற்றங்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பேரழிவுகளும் அது தரும் பேரிழப்புகளும் தான் அவை நம் வாழ்வை ஒரு சில நிமிடங்களில் உறுகுளைத்துவிடும் அவற்றை யாராலும் கணிக்க முடியாது எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம் இவை உயிர் தேசங்களுக்கும் பொருத்தேசங்களுக்கும் பெருமளவில் வழிவகுக்கும். இயற்கை சீரழிவுகளுக்கு பின்வரும் உதாரணங்கள் உங்களுக்கு தெளிவை தரும் மக்கள் தொகை பெருக்கம் நகரமயமாதல் பெருகிவரும் தொழிற்சாலைகளில் எண்ணிக்கை காடுகளை அழித்தல் மோசமான தொற்றுநோய் நோய்கள் கொரோனா நோய்கள் சுற்றுச்சூழல் சீர்கேடு அது சார்ந்த பிரச்சினைகள் நிலத்தடி நீரை உறிஞ்சுவது புவி வெப்பமாதல் ஓசோனில் பாதிப்பு கணிக்க இயலாத பருவ நிலை என இன்றைக்கு நாம் வாழும் சமூகத்தில் எனில் அடங்கா பிரச்சினைகளை நாமும் காரணமாக உள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டும் உலகமெங்கும் இயற்கை பேரழிவுகளால் இறந்து போகின்றபொழுது எண்ணிக்கை முதல் 10 இடங்களை பிடிப்பவை சைனா ஆஸ்திரேலியா தவிர்த்து இந்தியா போன்ற வளரும் மாடுகள் தான் என்பது கவனிக்கத்தக்கது அதிலும் தமிழ்நாடு தன்னுடைய புவியியல் அமைப்பு பருவநிலை நில அமைப்பு முதலான காரணங்களால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இவ்வகையான இயற்கை பேரிடர்களால் கணிசமான அளவில் இழப்புகளை உருவாக்கப்பட்டன மக்கள் பெரும்பளவில் மடிகின்றனர். ஆய்வுகளின் அடிப்படையில் இரண்டு மில்லியன் பேர் உயிரிழக்கின்றன ஆயிரக்கணக்கான நிலங்கள் பாதிப்படைகின்றன. பல்லாயிரம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள பயிர்கள் நாசமடைகின்றன. இந்தியாவில் 60% நிலப்பகுதி பூகம்ப உருவமாக ஏற்ற வகையில் உள்ளது. 8% நிலப்பகுதி புயலால் பாதிக்கப்படும் வாய்ப்பு 12 சதவீத பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்படையும் வாய்ப்பு உள்ளவை தென்னிந்தியாவில் உள்ள 5700 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்பகுதி புயல் ஆளும் கடற் சீற்றத்தாலும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள பகுதி என்பது கவலைக்குரிய உண்மை

Leave a Reply

Your email address will not be published.