இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட்பேங்க் ஆஃப் புதிய சாதனையை படைத்துள்ளது.பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ சந்தை மதிப்பு இன்று ரூ.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் இந்த சாதனையை செய்யும் 7 வது நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது எஸ்பிஐ. இந்தியாவில் முதலிடத்தில் ரிலையன்ஸ் நிறுவனமும், இரண்டாம் இடத்தில் டிசிஎல் நிறுவனமும் உள்ளன, தனியார் வங்கிகளில் HDFC மற்றும் ICICI ஆகியவை எஸ்பிஜயை விட அதிக சந்தை மதிப்புடன் இயங்குகின்றன.