

சென்னை நங்கநல்லூரில் மனகணக்குபடி தேதி, மாதத்தை கூறினால், கிழமையை துள்ளியமாக தெரிவித்த சென்னை மாநகராட்சி பெண் கவுன்சிலர் துர்காதேவி நடராஜன் லிங்கன் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். 27 நிமிடம் 22 விநாடிகளில் 365 நாட்களின் கிழமையை தெரிவித்து உலக சாதனை புரிந்தார்.
அரசு பள்ளி மாணவர்களிடம் விளக்கியபோது கணித பயிற்சி மற்றும் செல்போன் உள்ளிட்ட மிண்ணனு பொருட்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் வலியுறுத்தினார்.

சென்னை மாநகராட்சியின் 167 வது மாமன்ற உறுப்பினராக உள்ளவர் துர்காதேவி நடராஜன், பி.எஸ்.சி கணிதம் படித்த இவர் சிறுவயது முதல் கணித மனக்கணக்குகளை பயிற்சி செய்து வருகிறார்.
பெண்கள் சாதனையாளராக இருக்கும்போது சமுகத்தில் நல்ல முன்னெடுப்பாக திகழ்வதாக தெரிவித்த இவர் தனது மன கணக்குபடி தேதியும், மாததையும் தெரிவித்தால் கிழமையை துள்ளியமாக தெரிவிக்கும் இவர் ஆண்டின் ,365 நாட்களின் கிழமைகளை 27 நிமிடம் 22 விநாடிகளில் கூறி லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உலக சாதனை படைத்தார்.
இதற்கான பாராட்டு விழா நங்கநல்லூர் ஜெயகோபால் கரோடிய பெண்கள் பள்ளியில் அதற்கான பதக்கமும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அப்போது மாணவகளிடம் பேசிய சாதனை பெண் கவுன்சிலர் துர்காதேவி நடராஜன்..,
எதிலும் பயிற்சி செய்தால் எளிதாக செய்யமுடியும் என்பதற்கு அடையாளம் தான் தனது சாதனை என்றும் செல்போன் உள்ளிட்ட மிண்ணணு பொருட்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். மற்றவைகளை சிறுக சிறுக நினைவில் வைத்திருக்கவும் மன பயியிற்சியில் ஈடுபட்டால் இதுபோல் சாதனை புரியலாம் மனித மூளையின் ஆற்றலை நாம் அதிகரிக்க வேண்டும் என்றார்.

