
போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் கம்பத்தில், பள்ளி மாணவ மாணவியர்களின் விழிப்புணர் ஊர்வலத்தை நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் முன்னிலையில், தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

மனித சமூகத்தைச் சீர்கெடுப்பதில் போதைப்பொருள் உபயோகம் முதலிடம் வகிக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழித்து குடும்பம், சமூகத்தை தவறான பாதையில் இழுத்துச் சென்று விடுகிறது. போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பது மற்றும் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி ‘பன்னாட்டு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுக்கும் தினமக கடைபிடிக்கப்படுகிறது. இதை அடுத்து அரசு சார்பிலும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பத்தில், உத்தமபாளையம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
மாணவ மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கம்பம் பார்த்திடலில் துவங்கிய இப்பேரணியை, கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் முன்னிலையில, தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட இந்த பேரணியில் போதையை ஒழிப்போம், போதையில்லா உலகை படைப்போம், இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது, போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவ மாணவியர் கையில் ஏந்தி எவ்வாறு கோஷங்கள் எழுப்பி சென்றனர்.
பார்க் திடலில் துவங்கிய ஊர்வலமானது வஉசி திடல், காந்தி சிலை, போக்குவரத்து சிக்னல், கம்பம் வடக்கு காவல் நிலையம் வழியாக மெயின் ரோட்டில் ஜேஎஸ்டி மஹால் அருகே முடிவடைந்தது. இந்த பேரணியில் பள்ளி முன்னாள் தேனி மாவட்ட சுகாதார இணை இயக்குனர் டாக்டர் சையது சுல்தான், பள்ளி தாளாளர் சையது அபுபக்கர் சித்திக், பள்ளி முதல்வர் முகமது சாலி, திமுக மூத்த வழக்கறிஞர் துரை நெப்போலியன், மதிமுக மாவட்ட செயலாளர் விஎஸ்கே ராமகிருஷ்ணன், டாக்டர் வேல் பாண்டியன் மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

