சோழவந்தான் அருகே தென்கரையில் கலை மாமணி டி ஆர் மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அறிவியல் மன்றம் சார்பில் டி.ஆர்.மகாலிங்கத்தின் பேரன் டி.ஆர்.எம்.எஸ்.ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் திரையுலகப் பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொது மக்களுக்கும்
இருநூறுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கி கௌரவித்தார்கள். இதில் மன்னாடிமங்கலம் முள்ளிபள்ளம் ஏபிஜே அப்துல்கலாம் அறிவியல் மன்ற தலைவர் சரவணன் நிர்வாகிகள் பாலகுரு ரவிச்சந்திரன் மெக்கானிக் ஆறுமுகம் முள்ளை தவம் மதன் விக்கி கார்த்திக் அஜித் ஆறுமுகம் சுபாஷ் சரவணன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கினார்கள்.