• Wed. Dec 11th, 2024

மழை நிவாரணம் குறித்து அமித் ஷாவிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை

Byமதி

Nov 17, 2021

தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும் என அமித் ஷாவிடம் டி.ஆர்.பாலு எம்பி கோரிக்கை விடுத்தார்..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் 25 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 12 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மழையால் 49 ஆயிரத்து 757 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திமுக எம்பி டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டிற்கு மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கடிதம் கொடுத்தார்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும், மழை வெள்ள பாதிப்பை சீரமைக்க ரூ.2079 கோடி வழங்க வேண்டும் என்றும், மழை வெள்ள நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூ.550 கோடி வழங்க வேண்டும்’ என கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.