சமூக ஊடகங்களில் பல்வேறு வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டாலும், விலங்குகளின் சேட்டைகளைப் பார்ப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த வகையில், நாய் ஒன்று ஆனந்தமாக குளியல் போடும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
பொதுவாக, விலங்குகள், குறிப்பாக நாய்கள், அடிக்கடி குளிப்பதை தவிர்க்கவே விரும்புகின்றன. நாய்களை வளர்ப்பவர்கள் தங்கள் செல்ல பிராணிகளுக்கு குளிப்பாட்ட முயற்சித்தாலும், செல்லமாக மறுத்து அதிலிருந்து தப்பிக்கவே நாய்கள் விரும்புகின்றன. நாய்களின் பல கியூட் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் பகிரப்படுகின்றன. நம்மில் பலர் ஆசையாக நாய்களை வளர்க்கிறோம். அவற்றை குழந்தைகளை போல பார்த்துக்கொள்கிறோம்.
தற்போது ஒரு நாயின் கியூட்டான செயல் ஒன்றின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்ள நாய் நாம் யோசிக்க முடியாத ஒன்றை செய்கிறது, அதுவும் மிக ஆசையாக செய்கிறது. ஆம், இந்த நாய் மிக ஆசையாக நீரில் விளையாடியபடியே குளிக்கின்றது. இது பார்ப்பதற்கு மிக கியூட்டாக உள்ளது.