ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை அறிவித்தால் தங்கள் தரப்பு வேட்பாளரை திரும்பப்பெறுவோம் என ஓபிஎஸ் அறிவிதிருப்பது அவரது நிலைப்பாடு குறித்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணி வேட்பாளராக இவிகேஎஸ் .இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று காலை அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் தனது கட்சி வேட்பாளரை இன்று மாலை அறிவிப்பதாக தெரிவித்தார்.ஓபிஎஸ். இதன் படி அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில் முருகனை அறிவித்துள்ளார்.
மேலும் வெற்றி வாய்ப்பு எங்களுக்கே பிரகாசமாக இருப்பதாக கூறியுள்ளார் .கழக சட்டவிதிப்படி இரட்டை இலை எங்களிடம் தான் உள்ளது என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஆனால் கடைசியாக ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை அறிவித்தால் தங்கள் தரப்பு வேட்பாளரை திரும்பப்பெறுவோம் என ஓபிஎஸ் அறிவிதிருப்பது அவரது தேர்தல் நிலைபாடு குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தேர்தலில் பாஜக போட்டியிடும் என ஓபிஎஸ் எதிர்பார்க்கிறார். அல்லது பாஜக எங்கள் பக்கம் தான் உள்ளது என்பது காட்ட நினைக்கிறார். இதன் மூலம் பிரதமர் மோடி ஆதரவு தனக்குத்தான் என்பதை உணர்த்துகிறார். பாஜக போட்டியிட்டால் என்பதன் மூலம் இபிஎஸ் அணியினரை பயமுறுத்த முயலுகிறாரா என்பது தெரியவில்லை. இந்நிலையில் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் நிலைபாடுதான் என்ன என பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.