• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சொர்கத்திற்கு போகனுமா… அப்போ இந்த இலையை வைத்து வழிபடுங்கள்…

ByAlaguraja Palanichamy

Jul 20, 2022

தினமும் பூஜை அறையில் இந்த இலையை கொண்டு அர்ச்சனை செய்தால் நேராக சொர்க்கம் தான்.

செய்த பாவத்திற்கு தண்டனையே கிடையாது. சூப்பராக ஒரு பரிகாரம் கிடைத்துவிட்டது. இதனால் பாவத்தை செய்ய இனி பயப்படவே வேண்டாம் என்று பாவம் செய்ய தொடங்காதீர்கள். அறியாமல், தெரியாமல் செய்த பாவத்திற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு இந்த பூஜையை செய்து வந்தால் உங்களுக்கு பாவத்திலிருந்து மன்னிப்பு கிடைக்கும். தெரிந்தே அறிந்து மற்ற உயிரினங்களுக்கு செய்யக்கூடிய பாவத்திற்கு என்றைக்குமே மன்னிப்பு கிடையாது. செய்த பாவங்கள் தீர, நாம் செய்யக்கூடிய நன்மைகள் பல மடங்காக நமக்கு புண்ணியத்தை கொடுக்க, சிவலோக பதவி அடைந்த பிறகு சொர்க்கத்தை அடைய நாம் செய்ய வேண்டிய பூஜையில் எந்த இலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நாம் எல்லோருக்கும் தெரிந்த சிவபெருமானின் மறு அம்சமான வில்வ இலைகள் தான் அது. பெரும்பாலும் வில்வ இலைகளின் மகத்துவம் நம்மில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த வில்வ இலையை சிவலிங்கத்திற்கு மட்டும்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. சிவன் அம்சத்தை கொண்ட மற்ற திருவுருவப்படங்கள் நம் வீட்டில் இருந்தாலும் இந்த வில்வ இலையை கொண்டு தாராளமாக அர்ச்சனை செய்யலாம்.

சில பேர் வீடுகளில் நடராஜரின் திரு உருவம் இருக்கும். சில பேர் வீடுகளில் அண்ணாமலை ஈசனின் திரு உருவம் படம் இருக்கும். சிவன் பார்வதி சேர்ந்தது போல படம் இருந்தாலும் வில்வ இலையால் அர்ச்சனை செய்யலாம். வில்வ இலையால் பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு அர்ச்சனை செய்தால் நீங்கள் செய்த பாவம் படிப்படியாக குறைய தொடங்கும். இப்படி சிவன் அம்சம் கொண்ட திருவுருவப்படம் உங்கள் வீட்டில் இல்லை என்றால் முருகர் பிள்ளையாருக்கு கூட வில்வ இலையால் அர்ச்சனை செய்யலாம் தவறு கிடையாது. வில்வ இலையை நம் கையில் தொட்டாலே அது நமக்கு புண்ணியம்.

தினமும் காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை ஒரு முறை மனதில் நினைத்துக் கொண்டு, இரண்டே இரண்டு வில்வ இலைகளை எடுத்து அந்த சிவபெருமான் அம்சம் இருக்கக்கூடிய திருவுருவம் படத்தின் பாதங்களில் வைத்துவிட்டு, பின்பு உங்களுடைய வேலைகளை செய்ய தொடங்குங்கள். அவ்வளவு தான். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு புண்ணியம் ஏறிக்கொண்டே செல்லும். ஒவ்வொரு நாளும் பாவ கணக்கு குறைந்து கொண்டே செல்லும்.

பிரதோஷ சமயத்தில் சிவன் கோவில்களுக்கு அருகில் இந்த வில்வ இலைகள் கிடைக்கும் போது உங்களுடைய வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வில்வ இலைகள் காய்ந்தாலும் தவறு கிடையாது. காய்ந்த வில்வ இலைகளைக் கொண்டு ஈசனுக்கு அர்ச்சனை செய்தாலும் அதன் மூலம் நல்ல பலன் உண்டு. காய்ந்த வில்வ இலைகளை எடுத்து அப்படியே குப்பையில் போடாதீங்க. அந்த காய்ந்த வில்வ இலைகளை இரண்டு துண்டு பச்சை கற்பூரமோ அல்லது சாதாரண கற்பூரமும் போட்டு கொளுத்தி விட்டால், அந்த தீயில் இலைகள் அனைத்தும் பஸ்பமாகி கருப்பாக மாறிவிடும். இந்த சாம்பலை ஒரு டப்பாவில் ஸ்டோர் செய்து வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

அப்படி இல்லை என்றால் இந்த சாம்பலை நெற்றியில் இட்டுக் கொள்ளும் திருநீரோடு கொஞ்சமாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். வில்வ இலை சாம்பலோடு சேர்ந்த திருநீரை நெற்றியில் இட்டுக் கொண்டு சென்றால் தீய சக்திகள் நம்மை அண்டாமல் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய புனிதமான பூஜை பொருட்களின் பட்டியலில் கட்டாயமாக இந்த வில்வ இலையும் ஒன்று.

வில்வ இலையை கையில் வைத்துக்கொண்டு எந்த சுபகாரியங்களை நீங்கள் செய்தாலும் அது உங்களுக்கு இரட்டிப்பு பலனை கொடுக்கும். சுப காரியம் தடைபடாமல் நடக்கும் என்பதும் நம்பிக்கை. முயற்சி செய்து பாருங்கள் வில்வம் உங்களை எப்போதுமே வாழ்வாங்கு வாழ வைக்கும்.