• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

எஸ்.ஐ.ஆர் குறித்து தவறான தகவல்களை பரப்ப கூடாது..,

ByRadhakrishnan Thangaraj

Nov 25, 2025

எஸ்.ஐ.ஆர் பதிவுக்கு 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆர் குறித்த தவறான கருத்துக்களை பரப்பக் கூடாது, என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

விருருநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி:

1997- ம் ஆண்டு தொடங்கப்பட்ட புதிய தமிழகம் கட்சியின் 7- வது மாநில மாநாடு ஜனவரி மாதம் மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் நோக்கம் குறித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறேன்.

நான் செல்லும் கிராமப்பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தபடாமல் இருப்பதை பார்க்கிறேன் கடந்த 5 ஆண்டுகளாக ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என தெரியவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் கிராம பகுதிகளில் சாலை குடிநீர் கழிவு நீர் செல்ல வழி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமப் பகுதிகளில் வீடுகளில் வைத்து சட்ட விரோதமாக மது விற்பனை தாராளமாக நடப்பதால் மக்கள் மதுவுக்கு அடிமையாக்குகின்றனர். அடித்தட்டு மற்றும் உழைக்கும் மக்கள் உள்ள பகுதிகளை சுற்றி டாஸ்மாக் கடைகள் அதிகளவில் உள்ளது.

டாஸ்மாக் கடைகளை மூடுவது கொள்கை முடிவு. குறைந்த பட்சம் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இராஜபாளையம் அருகே உள்ள சுந்தர்ராஜபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா மொத்த விற்பனை நடக்கிறது. இதனால் இராஜபாளையம் முழுவதும் போதை பழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. காவல் துறை நடவடிக்கை எடுக்கக் வேண்டும்.

20 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடக்கிறது. போலி வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இதை அனைவரும் வரேவற்று ஆதரிக்க வேண்டும். ஒரு மாத அவகாசம் மட்டுமே இருப்பதால் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவர்களிடம் படிவம் வழங்க கூடாது. அரசியல் கட்சியினர் எஸ்.ஐ.ஆர் க்கு எதிரான கருத்தை மக்களிடையே பரப்ப வேண்டாம்.

தேசிய அளவிலான பாடத்திட்டம் இருக்கும் போது தமிழகத்தில் பாடத்திட்டம் மாற்றப்படும் எனக் கூறுவது அவசியமற்றது. வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி நாளை எனது தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.

மதுரை மாநாட்டில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு இருக்காது. அரசியல் யூகங்களுக்கு வழி வகுக்காத வகையில், எங்கள் மீது எந்த சாயமும் இல்லாத வகையில் மாநாடு நடைபெறும். மாநாட்டிற்கு பின்னரே அரசியல் மற்றும் கூட்டணி நிலைபாடு குறித்து அறிவிக்கப்படும், என்றார்