• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது- மீறினால் கடும் நடவடிக்கை-கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்…

ByN.Ravi

Oct 2, 2024

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில், உள்ள 37 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற்றது. பெரிய இலந்தைகுளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேவி மகேந்திரன், தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், துணைத் தலைவர் பாக்கியலட்சுமி கண்ணன், மதுரை ஆவின் துணை பொது மேலாளர் டாக்டர் ரவிச்சந்திரன், ஆவின் மேலாளர் செல்வம், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ரிஜ்வானா பர்வீன், முன்னிலையில் ஊராட்சி செயலர் போஸ் தீர்மானங்களை வாசித்தார். இதில், திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் பொது சுகாதார கேடு, அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து கிராம மக்கள் முன்னிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோன்று, கல்லணை ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சேது சீனிவாசன் தலைமையிலும், சின்னஇலந்தைகுளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமையிலும், கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை வசதி, உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து செய்து முடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.