• Fri. Jun 2nd, 2023

டி.என்.சேஷன் பிறந்த தினம் இன்று!

Byகாயத்ரி

Dec 15, 2021

இந்திய ஆட்சிப் பணி அலுவலராக இந்திய அரசின் பல்வேறு அரசுப் பொறுப்புக்களை வகித்தவர் டி.என்.சேஷன். கேரள மாநிலம் பாலக்காட்டில், 1932 டிசம்பர் 15ம் தேதி பிறந்தார், திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் என்ற, டி.என்.சேஷன். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் முதுகலை பட்டம் பெற்றார்.

சென்னை கிறிஸ்துவக் கல்லுாரியில், இயற்பியல் விரிவுரை யாளராக பணியாற்றினார்.ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, ஆட்சிப் பணியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். இந்தியாவின் 10வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக திசம்பர் 12, 1990 முதல் திசம்பர் 11, 1996 வரை பொறுப்பேற்றவர். வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தினார்.

தேர்தல் நடத்தை விதிகளைக் கடுமையாக்கினார்.சிறப்பான அரசுப் பணிக்காக, ‘மகசேசே’ விருது பெற்றுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்திய தேர்தல் நடைமுறையில் பல சீர்திருத்தங்களை அமல்படுத்திய டி.என்.சேஷன், 2019 நவம்பர் 10ம் தேதி, தன் 87வது வயதில் காலமானார்.டி.என்.சேஷன் பிறந்த தினம் இன்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *