• Sun. Mar 26th, 2023

சோமசுந்தர பாரதியார் காலமான தினம் இன்று!

Byகாயத்ரி

Dec 14, 2021

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர் சோமசுந்தர பாரதியார். துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், 1879 ஜூலை, 27ல் பிறந்தார். சிறந்த தமிழறிஞரன இவரின் இயற்பெயர், சத்தியானந்த சோமசுந்தரன். எட்டயபுரம் அரண்மனையில் அரசியின் பராமரிப்பில் வளர்ந்தார். சோமசுந்தர பாரதியார் தனது தொடக்கக் கல்வியை எட்டயபுரத்திலும் இடைநிலைக் கல்வியை நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரி பள்ளியில் கல்வி கற்றார்.

வழக்கறிஞரான சோமசுந்தர பாரதியார், மதுரை மாவட்டத்தில், தீண்டாமை ஒழிப்பு இயக்க தலைவராகவும் செயல்பட்டார். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். வ.உ.சி.,யின் அழைப்பை ஏற்று, ‘இண்டியன் நேவிகேஷன்’ எனும் சுதேசி கப்பல் கம்பெனியின் செயலராக பணியாற்றினார். காந்தியை, முதன்முதலில் தமிழகத்துக்கு வரவழைத்து உரையாற்றச் செய்தார். மதுரை அடுத்த உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான துவக்கப்பள்ளியை நிறுவினார்.


செய்யுள், உரைநடை, வாழ்க்கை வரலாறு, ஆய்வுகள் என, பல்வேறு நுால்கள் இயற்றியுள்ளார்; தமிழுக்கு வழங்கி உள்ளார். 1959 டிச., 14ல் தன் 80வது வயதில் இயற்கை எய்தினார்.சோமசுந்தர பாரதியார் காலமான தினம் இன்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *