

குமரி கிழக்கு அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது. திமுகவின் நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வில் தலைமைக்கழகத்தின் சார்பில்.தலைமை கழக பேச்சாளர் அன்பழகன், குமரி பிரபாகரன். வழக்கறிஞர் பாலஜனாதிபதி, குமரி ஸ்டிபன், பார்த்தசாரதி, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயரும் ஆன மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய பேச்சாளர்கள் திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வரும் சாதனைகளை பட்டியல் இட்டனர்.
நிறைவுறை ஆற்றிய கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மகேஷ், நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தொடர்ந்து ஆட்சி அமைக்கும் வகையில், தமிழக மக்கள் 200_க்கு அதிகமான இடங்களில் திமுக,அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெரும் வகையில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இருக்கும்.

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவிலில், பத்மநாபபுரம், குளச்சல் கிள்ளியூர் விளவங்கோடு ஆகிய ஆறு தொகுதிகளிலும். திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று சாதனை படைக்கும் என தெரிவித்தார்.

