• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம் 10_ம் திருவிழா, ஆடம்பர தேர் பவனி…

குமரி மாவட்டம் இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம் தேவாலயம் தேர்த்திருவிழாவின் 10 வது திருநாளான நேற்று (மே_11) மூன்று தேர்களின் பவனி நடைபெற்றது.

இந்த விழாவில் பல்சமய பக்த்தர்கள் பங்கேற்று திருத்தேரின் வடம் பிடித்து இழுத்ததுடன் கூடி நின்ற மக்கள் தேரில் பூ மாலை மற்றும் உப்பு, நல்ல மிளகு ஆகியவற்றை தேரில் காணிக்கையாக செலுத்தினார்கள்.

இராஜாவூர் மண்ணின் மைந்தர்களான அருட்பணியாளர்களான கார்மல்,
இக்னேஷியஸ், ஜாண் குழந்தை, ஜாண் அமலநாதன், பிரான்சிஸ், சேவியர்தேவதாஸ்
ஜோசப் காலின்ஸ், ஜேசுதாசன்குருசு, கார்மல், சகாய ஆனந்த், மைக்கேல், ஜார்ஜ் பிரைட், ஜார்ஜ் கிளமெண்ட், திவ்வியன் ஆகியோர் பங்கேற்று பிறந்த மண்ணின் விழாவை பக்த்தர்கள் உடன் கொண்டாடினார்கள்.