

சமீபத்தில் திமுக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில்இ தற்போது வேலூர், காஞ்சிபுரம், நாகர்கோவில் நகரங்களில் மாணவரணியில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மேலும்இ கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தற்போதே சில கட்சிகள் தொடங்கிவிட்டன. இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென முதலமைச்சர் முக.ஸ்டாலின் தீவிரமாக அரசியல் பணியாற்றி வருகிறார். இதற்கிடையே, கட்சிகளிலும் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. நிர்வாகிகள் நியமனம், நீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட திமுக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில் தான், தற்போது வேலூர், காஞ்சிபுரம், நாகர்கோவில் நகரங்களில் திமுக மாணவர் அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வேலூருக்கு ஆர்.அருண், காஞ்சிபுரத்திற்கு பாரதிதாசன், நாகர்கோயிலுக்கு முகமது சாலிஹ் ஆகியோரை நியமனம் செய்து திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி அறிவித்துள்ளார். தேர்தல் பணிகளை திமுக தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

