தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் 11 ஆயிரத்து 797 சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கின்றன.இந்த நிலையில் தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளில் திமுக 20, அதிமுக 1 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. 138 நகராட்சியில் 116 நகராட்சியில் திமுக 106, அதிமுக 5, பாமக 1, பிற கட்சிகள் 4 என முன்னிலை வகிக்கின்றன. 489 பேரூராட்சிகளில் திமுக 267, அதிமுக 33, பாஜக 4, பாமக 2, நாதக 1, அமமுக 1, பிற கட்சிகள் 34 என முன்னிலை வகித்து வருகின்றன.