தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுக
கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 16 வார்டுகளில் அமமுக 9, இடங்களிலும் அதிமுக 3 இடங்களிலும், திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மக்கள் செல்வாக்கு பெற்ற இரண்டு பெரிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி அமமுக வெற்றிவாகை சூடியுள்ளது. இதனால் டிடிவி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.