• Sat. Sep 23rd, 2023

வெல்கம் பேக் மோடி சொல்லவேண்டிய நிலையில் திமு.க உள்ளது.-பாஜக மாநில செயலாளர் பேட்டி

ByA.Tamilselvan

May 25, 2022

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது கோ பேக் மோடி என்று சொன்ன நிலையில், ஆளுங்கட்சியாக வெல்கம் பேக் மோடி என சொல்ல வேண்டிய நிலையை மக்கள் தண்டனையாக கொடுத்துள்ளனர் என பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி
மதுரையில் புறநகர் மாவட்ட பாஜக சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டடத்தில் பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் கலந்து கொண்டனர்.
முன்னதாக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் செய்தியளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில்,
சென்னையில் பாஜகவின் தாழ்த்தப்பட்ட சமுதாய பிரிவு தலைவர் பாலசந்தர் கொலை செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்று உள்ளது.இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்தக்கொலை குறி வைத்து தாக்குதல் நடத்தி உள்ளது போல தெரிகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பாக நடைபெற்றுள்ள இந்தச்சம்பவம் தமிழகத்திற்கு பிரதமர் வருகையையொட்டி ஒரு அச்சுறுத்தலாக நடந்துள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கொலையை செய்தது யாராக இருந்தாலும், என்ன சாதி, மதம், யாராக இருப்பினும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் கட்டிப்பிடித்து வரவேற்றது தமிழகத்தில் நாசக்கார சக்திகளுக்கு உற்சாகம் தருவது போல நடந்து விடக்கூடாது.
நாளை தமிழகம் வரும் பிரதமரை முழு மனதோடு வரவேற்க உள்ளோம்.கிழக்கே போகும் ரயில் என்ற சினிமா எடுத்த இயக்குனரின் மாவட்டத்தில் ரயிலே இல்லை. இது மேற்கே போகும் ரயில். மதுரை தேனி ரயில் தொடக்க விழாவில் பாஜக தொண்டர்கள் கலந்து கொள்வோம்.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு மாநில மாவட்ட நிர்வாகிகள் அமைப்பு சீரமைக்கப்பட்டு வருகிறது.சமூக நீதியை நிலைநாட்டும் கட்சி பாஜக மட்டும் தான். பிறப்பின் அடிப்படையில் தலைவரை நியமிக்கும் கட்சி பாஜக அல்ல.திமுகவில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தங்கள் தந்தையோடும், மகன் படங்களோடும், அமைச்சர்கள் கூட தங்கள் மகன்களின் படங்களோடு தான் போஸ்டர் ஒட்டுகின்றனர்.தமிழ்நாடு முழுக்க முதல்வர் ஸ்டாலினோடு உதயநிதி ஸ்டாலின் படத்தை போடுகின்றனர். குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்தால் தான் திமுகவில் இருக்க முடியும்.பாஜகவில் உழைப்பவர்களுக்கு புதியவர்களுக்கு இளைஞர்களும் இடம் உள்ளது. பதவி, பொறுப்பு உள்ளது. 33 தவீத இடஒதுக்கிடு கொடுக்கிற கட்சி பாஜக.முதன்முதலில் தலித் ஒருவரை நிர்வாகியாக்கியதை மார்க்சிஸ்ட் கட்சியினர் சாதனையாக கூறுகின்றனர். பாஜகவில் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்று அவர்களுக்கு அசாதாரண செய்தியாக உள்ளது.உண்மையான சமூகநீதி சுயமரியாதை உள்ள கட்சி பாஜக. திமுகவினர் முதுகையும் இடுப்பையும் இரண்டடி வளைத்து தான் திமுக தலைவர்களை சந்திக் முடியும்.
தமிழகத்திற்கு கம்பீரமாய் சிங்கம் போல் பிரதமர் வருவார். நாங்களும் சிங்கம் போல சென்று பிரதமரை வரவேற்போம்.அண்ணாமலை வந்தாலே திருவிழா போல கூட்டம் கூடும். நாங்கள் அதுபோல ஆரவாரத்தோடு பிரதமரை வரவேற்க உள்ளோம்.பிரதமர் அரசாங்கம் சார்ந்த நிகழ்ச்சிக்கு வருகிறார். கட்சி நிகழ்ச்சிக்காக வரவில்லை.திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது கோ பேக் என்று சொன்ன நிலையில், ஆளுங்கட்சியாக வெல்கம் மோடி என சொல்ல வேண்டிய நிலையை மக்கள் தண்டனையாக கொடுத்துள்ளனர்.
மதுரையில் வலுக்கட்டாயமாக மூடப்பட்டுள்ள கல்குவாரிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், விதி மீறல் இல்லாத குவாரிகளை திறந்து தொழிலாளர்களின் நலனை காக்க வேண்டும் என பேசினார்.

Related Post

விஸ்வகர்ம சமூக மாணவர்களின் கல்லூரி கல்வி கனவை தடுக்கும் மோடி.., இரா.முத்தரசன் கடுமையான குற்றச்சாட்டு…
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!
காவிரி நதிநீர் தீர்ப்பை செயல்படுத்தமல் கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – ஓபிஎஸ் பேட்டி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed